பாஜகவின் வாக்குறுதிகள் அனைத்தும் ஏப்ரல் தின முட்டாள் நகைச்சுவைகளே – சிவசேனா

0
234

பாஜக அரசு கடந்த 7 ஆண்டுகளாக மக்களை முட்டாளாக்கி வருகிறது. மக்களின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்துவது உட்பட பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் ஏப்ரல் தின முட்டாள் நகைச்சுவைகளே என்று சிவசேனாவின் மாநிலங்களவை உறுப்பினரான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 1 முட்டாள்கள் தினமாக கொண்டாடப்படுகிறது, இதில் மக்கள் ஒருவருக்கொருவர் முட்டாள்களாக்கி விளையாடுவர்.

இந்த வகையில் கருப்புப் பணத்தை மீட்பது, ஒவ்வொரு மக்களின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்துவது, வேலைவாய்ப்பு வழங்குவது போன்ற பாஜக அரசின் வாக்குறுதிகள் மக்களை முட்டாளாக்கும் நகைச்சுவையைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்று சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற 5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, நீண்ட நாட்களாக உயர்த்தப்படாமல் இருந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டது. ஆட்சியாளர்கள் எப்போதும் சாமானியர்களை முட்டாளாக்குகிறார்கள் என்று சிவசேனாவின் மாநிலங்களவை உறுப்பினரான சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here