பாரதிய ஜனதா கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக பீகார் மாநில ஆளுநராக உள்ள ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வருகிற ஜூலை மாதம் 24ஆம் தேதியோடு முடிவடைகிறது. இதனையடுத்து ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஜூலை 17ஆம் தேதி நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை ஜூலை 20ஆம் தேதி நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து வேட்பாளரைத் தேர்வு செய்யும் பணியில் பாஜக சார்பில், மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவில் மத்திய அமைச்சர்களான ராஜ்நாத் சிங், அருண்ஜேட்லி மற்றும் வெங்கையா நாயுடு ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்நிலையில், பாஜகவின் நாடாளுமன்றநிலைக் கூட்டம் டெல்லியில் திங்கட்கிழமை (இன்று) நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷா, பாரதிய ஜனதா கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக பீகார் மாநில ஆளுநராக உள்ள ராம்நாத் கோவிந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

1. 1945ஆம் ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி, உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் தெஹத்தில் பிறந்தார்

2. ராம்நாத் கோவிந்த், பி.காம்; எல்,எல்.பி பட்டம் பெற்றுள்ளார்.

3. மத்திய அரசின் வழக்கறிஞராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் 1977ஆம் ஆண்டு முதல் 1979ஆம் ஆண்டு வரை பணிபுரிந்துள்ளார்

4. 1994-2000 மற்றும் 2000- 2006ஆம் ஆண்டுகளில், இரு முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ளார்.

5. ராம்நாத் கோவிந்த், பாரதிய ஜனதா கட்சியின் தலித் மோர்ச்சா பிரிவின் தலைவராக (1998 – 2002) இருந்துள்ளார்.

6. பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்துள்ளார்.

7. ஆல் இந்தியா கோலி சமாஜ் அமைப்பின் தலைவராகவும் இருந்துள்ளார்.

8. லக்னோவில் உள்ள டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் நிர்வாக மேலாண்மையின் உறுப்பினராக இருந்துள்ளார்

9. மத்திய உள்துறை, பெட்ரோலியத்துறை உள்ளிட்ட துறைகளின் நாடாளுமன்ற கமிட்டிகளில் உறுப்பினராக பதவி வகித்துள்ளார்

10. மாநிலங்களவைக் குழுவின் தலைவராகவும் ராம்நாத் கோவிந்த் இருந்துள்ளார்.

இதையும் படியுங்கள் : 47 வயதில் நடிகைக்கு வந்த திருமண ஆசை

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்