தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றால் தமிழக அரசைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என பாஜகவின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணிய சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்: கடலூர்: தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்திய நாம் தமிழர் கட்சியினர் கைது

பொங்கலுக்கு முன்பு ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு வழங்க முடியாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதுகுறித்து பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன், தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால் பாஜக ஆதரவு அளிக்கும் என கூறியிருந்தார். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் ஆதரவளிப்பதாகக் கூறினார். இது குறித்து கருத்து தெரிவித்த திராவிட கழகத் தலைவர் வீரமணி, பாஜகவினர் உள்நோக்கத்துடன் சொல்வதாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கி அதன் மூலம் தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

subramaniyanswamy

இந்நிலையில், பாஜகவின் மூத்தத் தலைவர் சுப்ரமணிய சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால், தமிழக அரசைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என பதிவிட்டுள்ளார். திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கூறியது போன்றே பாரதிய ஜனதா கட்சியின் நோக்கம் வெளிப்பட்டு விட்டது.

இதையும் படியுங்கள்: ”மண்ணையும் மக்களையும் அழிக்க சதி”: கொந்தளிக்கும் மதுரை

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்