அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அவரது உறவினர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்குச் சொந்தமான 150க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

நமது எம்ஜிஆர் மற்றும் ஜெயா டிவி அலுவலகம், போயஸ் கார்டனில் உள்ள ஜெயா டிவியின் பழைய அலுவலகம், ஜாஸ் சினிமாஸ், அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லம், தஞ்சையில் உள்ள நடராஜன் இல்லம், கோடநாடு எஸ்டேட், என சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்களுக்குச் சொந்தமான 150க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர், வியாழக்கிழமை (இன்று) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

it-2

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டிடிவி தினகரனின் ஆதரவாளரும் வழக்கறிஞருமான காசிநாதபாரதி, வருமான வரி ஏய்ப்பிருந்தால், முறையாக நோட்டீஸ் அனுப்பியிருக்கலாம் என்றும், ஆனால் அப்படிச் செய்யவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

kasi

மேலும் அவர், பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்த சிறிது காலத்திலேயே கோடிக்கணக்கான செலவில் தனது இல்லத் திருமண விழாவை நடத்திய ஜனார்த்தன ரெட்டி வீட்டிலும், சேகர் ரெட்டி வீட்டிலும் சோதனைகள் நடத்தப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார். வருமான வரித்துறை என்பது சுந்திரமாக செயல்படும் அமைப்பு என நினைத்திருந்ததாகவும், கட்சிகளில் விவசாய பிரிவு, தொழிலாளர் பிரிவு என இருப்பதுபோல், பாஜகவின் மற்றொரு அரசியல் பிரிவாக வருமான வரித்துறை உள்ளது என்பது இதன் மூலம் தெளிவாகிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளர்.

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்