ஜிஎஸ்டி வரம்புக்குள் ரியல் எஸ்டேட் துறையைக் கொண்டு வர மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக அமைச்சர் அருண்ஜேட்லி கூறியுள்ளதற்கு காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி, வாஷிங்டனில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் வரிச் சீர்திருத்தம் தொடர்பாக உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், இந்தியாவில் அதிகளவில் பணம் புழங்கும் துறையாகவும், வரி ஏய்ப்பு நடைபெறும் தொழிலாகவும் ரியல் எஸ்டேட் துறை இருப்பதாகத் தெரிவித்தார். அதனால் அதனை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும், அதற்கான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நவ.9ஆம் தேதி கவுகாத்தியில் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்தார். மத்திய அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

real

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ராஜூ வாஹ்மாரே, ” பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் அருண் ஜேட்லி ஆகியோர் இந்த நாட்டை ஒரு படுகுழியில் தள்ள முடிவு செய்து விட்டனர். ரியல் எஸ்டேட் சந்தையில் ஏற்கனவே குழப்பம் நிலவுகிறது. இந்நிலையில் இத்துறையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்தால், அது ஒரு பேரழிவை ஏற்படுத்தும்” என்றார்.

இதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்