பாஜகவிடமிருந்து நாட்டைக் காப்பற்ற எதையும் செய்வோம் – அர்விந்த் கெஜ்ரிவால்

0
190
Arvind Kejriwal


பாஜகவிடமிருந்து நாட்டை காப்பற்றுவதற்கு என்ன வேண்டுமானலும் செய்வோம் என்று டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் முதற்கட்ட வாக்குபதிவு ஏப்ரல் 11 ஆம் தேதி நடந்தது.   முதற்க்க்டட வாக்குபதிவின்போது வாக்குப் பதிவு எந்திரங்கள் சில இடங்களில் சரியாக செயல்படவில்லை எனப் புகார்கள் எழுந்தன. இதுகுறித்து ஆலோசிக்க ஞாயிற்றுக்கிழமை  டெல்லியில் எதிர்க்கட்சிகள்  கூட்டம் நடந்தது.

இதனைத் தொடர்ந்து டெல்லியில் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “இந்திய நாடு தற்போது ஆபத்தான நிலையில் உள்ளது. அதனால் இந்திய நாட்டை பாஜகவிடம் இருந்து காப்பாற்ற ஆம் ஆத்மி கட்சி என்ன வேண்டுமானாலும் செய்யும்” எனத் தெரிவித்தார்.

இந்தச் செய்தியாளர் சந்திப்பில் கெஜ்ரிவாலுடன் காங்கிரஸ் தலைவர்கள் கபில் சிபல் மற்றும் அபிஷேக் சிங்க்வி ஆகியோர் உடனிருந்தனர். டெல்லியில் காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே கூட்டணி குறித்து அவர்களிடம் கேட்கப்பட்டது. அப்போது கபில் சிபல், “கூட்டணி குறித்து கெஜ்ரிவாலிடம்தான் கேட்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.  “டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் நிலை குறித்து அனைவரும் அறிவர். டெல்லியில் கூட்டணி உறுதியான நிலை ஏற்பட்டிருந்தது. எனினும் அதை மற்ற மாநிலங்களுடன் சேர்த்து பார்த்தப் போது கூட்டணி சரியாக இல்லை” எனக் அபிஷேக் சிங்க்வி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here