பாசிச அரசாங்கத்திற்கு எதிரான தனது போராட்டத்தின் விளைவை சந்தித்து வருகிறேன்: கங்கனா ரனாவத்

0
174

தன்னை சிறையிலடைக்க மகாராஷ்டிரா அரசு முயற்சி செய்து வருவதாக நடிகை கங்கனா குற்றஞ்சாட்டி உள்ளார்.

கங்கனா ரனாவத் மற்றும் அவருடைய சகோதரி ரங்கோலி ஆகியோரின் டிவிட்டர் பதிவுகள் இரு சமூகத்தினர் இடையே மோதலை தூண்டும் வகையில் அமைந்திருப்பதாகக்கூறி பாலிவுட் உடற்பயிற்சியாளா் முனாவா் அலி சையது என்பவா் பாந்த்ரா மாநகரமாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தாா். அந்த மனுவை விசாரித்தநீதிமன்றம் அதுகுறித்து விசாரணை நடத்த காவல்துறைக்கு உத்தரவிட்டது.

அதனடிப்படையில் கங்கனா மற்றும்அவருடைய சகோதரி மீது பாந்த்ரா காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆா்)பதிவு செய்து, இருவரும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பாந்த்ரா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவு தொடா்பாக வெளியிட்ட டிவிட்டர் பதிவில் ‘பப்பு சேனை’ என்று கங்கனா குறிப்பிட்டாா்.

இந்நிலையில் கங்கனா ரணாவத் மீது நீதிமன்றத்தில் புதிய வழக்கு ஒன்று தாக்கலாகி உள்ளது.

கங்கனாவின் இந்த விமா்சனம், நீதித் துறைக்கு எதிரானது என்று கூறி வழக்குரைஞா்அலி காசிஃப் கான் தேஷ்முக் என்பவா், அந்தேரிநீதிமன்றத்தில் குற்ற வழக்கு ஒன்றை வியாழக்கிழமை தாக்கல் செய்தாா். இந்த வழக்குவரும் நவம்பா் 10 ஆம் தேதி விசாரணைக்குஎடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

இதுகுறித்து நடிகை கங்கனா ரனாவத் தனது டிவிட்டர் பதிவில் கூறுகையில், ‘’நான் சாவர்க்கர், சுபாஷ் சந்திரபோஸ், ஜான்சிராணி ஆகியோரை வழிபடுகிறேன். அரசு என்னை சிறையில் அடைக்க முயற்சி செய்கிறது.

இந்த முயற்சிகள் நான் வணங்கும் தலைவர்கள் மீது எனக்கு மேலும் நம்பிக்கை ஏற்பட வகை செய்கிறது. விரைவில் சிறைக்குப் போக நான் தயாராகி வருகிறேன். சிறையில் நான் வணங்கும் தலைவர்கள் அனுபவித்த துயரங்கள் என் வாழ்க்கை புதிய அர்த்தத்தை வழங்கட்டும். ஜெய்ஹிந்த்’’ என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொரு டிவீட்டில், மகாராஷ்டிராவில் ‘உண்மையான பாசிச அரசாங்கத்திற்கு எதிரான தனது போராட்டத்தின் விளைவை சந்தித்து வருகிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here