பாசிசத்தை விட மோசமானது மோடியின் ஆட்சி ; தொகுதி தலைவராக இருக்கக்கூட தகுதியற்றவர் மோடி ; விளாசும் மம்தா பானர்ஜி (என்டிடிவி பேட்டியின் முழுவிவரம்)

0
342

பாசிசத்தை விட மோசமானது மோடியின் ஆட்சி என்றும் மோடியும் அமித் ஷாவும் தொகுதி தலைவர்களாக இருக்கக் கூட தகுதியற்றவர்கள் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விளாசியுள்ளார். 

மேற்கு வங்கத்த்தில் மேற்கு மிட்னாபுரில்  தேர்தல் பிரச்சாரத்தில் மம்தா பானர்ஜி பேசியதாவது – 

மோடிஜி அவர்களே நீங்கள் நல்லது எதுவும் செய்யவில்லை. நல்லது கொண்டு வருவேன் என்று மோடி கூறினார் ஆனால் அவர் என்ன நல்லவற்றைக் கொண்டு வந்தார்? அவர் கொண்டுவந்த acchie din – ஆல்  12000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர் . விவசாயிகளை தற்கொலை செய்ய வைத்ததுதான் மோடி கொண்டு வந்த acchie din . மோடியின் acchie din நாட்டில் இருக்கும் 3 கோடி இளைஞர்களின் வேலையை பறித்ததுதான் . மோடியின் acchie din பணமதிப்பிழப்பு கொண்டு வந்து சிறு குறு தொழில்களை சிதைத்ததும், சாதாரண மக்களின் வாழ்க்கையை சிதைத்ததும்தான் . 

மோடியின் acchie din கலவரங்களை உருவாக்குவதுதான் . மோடியின் acchie din கத்தி, வாள்களுடன் பேரணி நடத்துவதுதான். மோடியின் acchie din சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்துவிட்டு அவர்களை ஒரு காசு இல்லாத ஏழையாக்குவதும்தான்.  மோடியின் acchie din இதுவரையில் கெடுதலே செய்துள்ளது. கடந்த நான்கரை வருடங்களில் ஊர் ஊராக சுற்றிவிட்டு எதிர்க்கட்சிகளை மிரட்டுகிறார் மோடி. மோடி சிபிஐயையும், அமலாக்கத்துறையையும் எதிர்க்கட்சிகளின் வீட்டுக்கு அனுப்புகிறார். என்னுடைய தாய்மார்களே, சகோதரிகளே, சகோதர்களே  மோடியின் (சௌகிதாரின்) ஆட்சி எவ்வாறு நடந்தது?    மோடி ஆட்சிக்கு வரமாட்டார். டெல்லியில் ஆட்சி மாற்றம் நடக்கும் அது உறுதி. அரசியல் என்பது மக்களின் நலனுக்கானது. நான் வீட்டில் பள்ளி மாணவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுத்து அதில் வந்த வருமானத்தின் மூலம் என் கட்சிக்கு போஸ்டர்களை செய்தேன். நானே போஸ்டர் உருவாக்கியிருக்கிறேன். 

இப்போது போஸ்டரில் ஒரு வரி எழுதுவதற்கு ரூ5000 கேட்கிறார்கள். போஸ்டர்களை உருவாக்க பாஜகவினர் ஏஜெண்டுகளை கொண்டு வந்திருக்கிறார்கள். இது குறித்து நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்போம். மற்ற கட்சியினர் மீது நடவடிக்கை எடுப்பது போல் பிரதமர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்.

மோடியும் ஒரு வேட்பாளர்தானே? அவரை மட்டும் ஏன் தனிப்பட்ட முறையில்  கவனிக்கிறார்கள்? என்று தேர்தல் ஆணையத்தைச் சாடினார் .   மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த நாட்டில் இனி தேர்தலே நடக்காது என்றார் மம்தா.  

பிரச்சாரத்துக்கு இடையே என் டி டிவியின் பிரணாய் ராயுடன் பேசியதாவது – 

மத்திய படைகளை மோடி இங்கே குவித்துள்ளார். உள்துறை அமைச்சகத்தில் ஓய்வு பெற்ற அதிகாரி ஆர் கே மித்ராவின் மனைவி ஶ்ரீரூபா மித்ரா சௌத்ரி  பாஜக வேட்பாளராக வடக்கு மால்டாவில் போட்டியிடுகிறார். அவருக்காக, அதாவது பாஜகவுக்கு உதவி செய்ய  மத்திய படைகளை அங்கு நிறுத்தியிருக்கிறார்கள். அவர்கள் மாநில காவல்துறையை உள்ளே அனுமதிக்கவில்லை. மத்திய படைகள் பாஜகவுக்கு வேலை செய்ய நிற்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். 

 எதிர்க்கட்சிகள், அவர்கள் பக்கம் சாயாத ஊடகங்கள் மீதும் அமலாக்கத்துறையையும், சிபிஐயையும் ஏவி விடுகிறது பாஜக அரசு. அவர்கள் எதிர்க்கட்சிகளை தங்கள் கட்டுக்குள் வைத்திருக்க நினைக்கிறார்கள். பாஜகவினர் அரசியல்ரீதியாக எதிர்க்கட்சியினரை எதிர்கொள்ள வேண்டும்.  எதிர்க்கட்சியினரை சிபிஐ, அமலாக்கத்துறைக் கொண்டு மிரட்டி வருகின்றனர். 

மோடியின் பிரச்சாரத்துக்கு போக வேண்டும் என்று மத்திய அரசு அலுவலகங்களில் வேலைப்பார்க்கும் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அவர்கள் ஏஜெண்டுகள் மூலம்  பல கோடிகளை செலவழித்து மோடியின் பிரச்சாரத்துக்கு மக்களை கொண்டு வருகின்றனர். 

என்னுடைய கட்சியிலிருந்த ஒருவர் பாஜகவில் இணைந்துக் கொண்டு பல விஷயங்களை செய்து வருகிறார். முஸ்லிம் மக்கள் தொகை இங்கு அதிகம் . பாஜகவினர் ஹிந்து முஸ்லிம்களுக்குள் இருக்கும் ஒற்றுமையைக் குலைத்து அதை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்த நினைக்கின்றனர். வாக்கு எந்திரங்களிலும் சில குளறுபடிகளை செய்துள்ளனர் அது குறித்து நான் ஏற்கனவே தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்து விட்டேன். சட்ட ஒழுங்கு பிரச்சனை இங்கு இருக்கிறது என்று கூசாமல் பொய் சொல்கின்றனர் பாஜகவினர் . அப்படி எதுவும் இங்கு இல்லை. தேர்தலுக்காக ஆர் எஸ் எஸ் – வாதிகளை இங்கு அனுப்பி வைத்துள்ளனர். மத்திய படைகளை அனுப்பி வைத்துள்ளனர். என்னுடைய கட்சியைச் சேர்ந்த தொண்டர்களை கொன்றிருக்கின்றனர். வெளி மாநிலங்களிலிருந்து பல ரவுடிகளை இங்கு கூட்டி வந்துள்ளனர். 

நான் இங்கு பாஜக, ஆர் எஸ் எஸ், சிபிஐ, அமலாகத்துறை, மத்திய அரசின் நிறுவனங்கள் , காங்கிரஸ், சிபிஎம் எல்லோருடனும் போராடிக் கொண்டிருக்கிறேன். மாநில அளவில் நான் காங்கிரஸ் உடன் போராடிக் கொண்டிருக்கிறேன், இந்திய  அளவில் அல்ல.  சிபிஎம்ம்மில் புத்ததேவ் பட்டாசார்யாவைத் தவிர்த்து வேறு எல்லோரும் பாஜகவுடன் கைகோர்த்துள்ளனர் . நான் மக்களுடன் கைகோர்த்துள்ளேன். 

இந்த முறை பிராந்தியக் கட்சிகள்தான் டெல்லியில் ஆட்சியமைக்கும், பிராந்தியக் கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து செயல்பட இருக்கிறோம். மோடியை விரட்டுவதில் திரிணமூல் காங்கிரஸ்  முக்கிய பங்கு வகிக்கும் . அவரை துரத்துவோம். அவரை போல்ட் அவுட் செய்வோம்.  என்னுடைய நோக்கம், பார்வை , சிந்தனை எல்லாமே மோடியை விரட்டுவதுதான். 

மோடி ஆட்சியின் தரம் குறித்து 1 மார்க் கூட அவருக்கு தர முடியாது அந்த அளவுக்கு மோசமான ஆட்சி மோடியின் ஆட்சி . குஜராத்தில் நடந்த கலவரத்துக்கு பிறகு மோடி திருந்தி நல்ல ஆட்சியைத் தருவார் என்று எதிர்பார்த்தேன் ஆனால் இந்த முறை மிக மிக மோசமாக ஆட்சி நடத்திவிட்டார்.  மோடியின் ஆட்சி பாசிசத்தைவிட மிக மோசமானது .  

மேற்கு வங்கத்தில் நடப்பதைக் கேட்டு பாருங்கள் எம்ர்ஜென்சியில் நடந்ததைவிட மோசமாக இருக்கிறது. மேற்கு வங்கத்தில் அதிகாரிகளை தங்கள் கைக்குள் போட்டுக் கொண்டு தனியாக ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறார் மோடி. 

திரிணமூல் காங்கிரஸில் பல சூப்பர் ஸ்டார்கள் இருக்கிறார்கள். அவர்கள் மக்களுடன் இருக்கிறார்கள். மோடியும் , அமித் ஷாவும் உபயோகிக்கும் வார்த்தைகள், அவர்கள் தொகுதி தலைவராக இருக்ககூட தகுதியற்றவர்கள்.

அவர்கள் (பாஜகவினர்) கலவரத்தையே நம்பி அரசியல் நடத்துகிறார்கள். வளர்ச்சி ஒன்றும் இல்லை. அவர்கள் அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றுபவர்கள். அவர்களது ஆட்சியில் ஜனநாயகமே இல்லை . 

மோடி ஒவ்வொரு முறை மக்களிடம் பேசும்போதும் தான் நாட்டின் பிரதமர் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு பேச வேண்டும். அவர் தரம் தாழ்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். நான் அதுமாதிரி பேசமாட்டேன். அவரை பிரதமர் என்று கூற கேவலமாக இருக்கிறது.

மோடியையும், அமித் ஷாவையும் ஏன் Sign board என்று அழைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு  அவர்களை நான் ரவுடிகள் என்று சொல்லவில்லை, பாஜகவின் Sign board என்று கூறுகிறேன். அவர்கள் வேறு யாரையாவது முன் நிறுத்துகிறார்களா? யாரையும் முன் நிறுத்துவதில்லை. இன்று அவர்கள் அதிகாரத்தில் இருக்கிறார்கள். நாளைக்கு அவர்களின் அதிகாரம் போன பிறகும் அவர்கள் Sign board தான். 

நாட்டை நேசியுங்கள் என்று கூறிக் கொள்ளும் ஆர் எஸ் எஸ் கையில் கம்புகளுடன் வலம் வருகிறார்கள். தேர்தலுக்கு பிறகு பாஜகவினர் உங்களிடம் ஆதரவு கோரினால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு அப்படி எதுவும் நடக்காது. அந்தப் பேச்சுக்கே இடமில்லை என்றார் மம்தா பானர்ஜி. இன்னமும் எதிர்க்கட்சிகள் ஒன்றாகவே இருக்கிறோம் . நாங்கள் ஒன்றாக இணைந்து ஆட்சி செய்வோம் என்று உறுதிபட கூறினார். 

ராகுல்  காந்தி குறித்த கேள்விக்கு அவர் ஒரு கட்சியின் தலைவர் , அவர் வேலையை அவர் செய்கிறார். அதற்கு மேல் கட்சியைப் பற்றி நான் எதுவும் கூற முடியாது என்றார். 

பிரதமராக வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு நான் மோடியை அகற்றுவதற்கான வேலைகளை செய்வேன். மோடியை துரத்துவதுதான் என்னுடைய நோக்கம், சிந்தனை, பார்வை, எல்லாமே . அதற்கான வேலைகளை செய்வேன். நாங்கள் (எதிர்க்கட்சிகள்) ஒன்றிணைந்து அனைத்து வேலைகளையும் செய்வோம். அதற்கு பிரணாய் ராய் – கிச்சடி அரசா? என்று கேட்க மம்தா பானர்ஜி என்ன கிச்சடி? சில நேரங்களில் நாம் கிச்சடியும் சாப்பிடுகிறோம். சில நேரம் எல்லா பதார்த்தங்களையும் கலந்து செய்யும் உணவையும் சாப்பிடுகிறோம் என்றார்.  

கடந்த 5 ஆண்டுகளில் கற்றுக் கொண்டது என்னவென்றால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவதே.  மோடி அரசு அரசியலமைப்பையே ஆட்டம் காண செய்துவிட்டனர். மக்களுக்காக வேலை செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். மக்கள்தான் எனக்கு நம்பிக்கையளிக்கிறார்கள், நாங்கள் இணைந்து போராடி வெல்வோம். நான் தினமும் 20 கிலோமீட்டர்கள் நடக்கிறேன். அமித் ஷா இங்கு வந்தால் அவரிடம் என்ன கேட்பீர்கள் என்ற கேள்விக்கு பாஜகவினர் என்னைப் பார்த்து பயப்படுகிறார்கள் அதனால்தான் அவர்கள் என்னை தாக்கி பேசுகிறார்கள். 

நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். நாங்கள் வெல்வோம். மேலும் நான் கேள்விபட்டது வரைக்கும் பாஜவினருக்கு உத்தர பிரதேசத்தில் 17 சீட் கூட கிடைக்காது என்று . காங்கிரஸுக்கு 7 முதல் 8 சீட்டுகளும், மாயாவதி, அகிலேஷ் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்றார். 

நீங்கள்தான் இந்திய அளவில் மிகப் பெரிய கட்சியாக இருப்பீர்கள் என்ற கேள்விக்கு மக்கள் ஆதரவு கிடைத்தால் நாங்கள்தான் என்றார்.   

ndtv.com