பாங்க் ஆஃப் பரோடா வங்கியுடன் விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவை இணைக்கப்பட்டு, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. அதன்படி, விஜயா வங்கி மற்றும் தேனா வங்கி ஆகியவற்றின் வாடிக்கையாளர்கள், பாங்க் ஆஃப் பரோடா வாடிக்கையாளர்களாகக் கருதப்படுவர்.


இந்த  வங்கிகளை  இணைக்க  இருப்பதாக, மத்திய  அரசு  கடந்த  ஆண்டு  செப்டம்பர்  மாதம்அறிவித்தது. 

அதன்  தொடர்ச்சியாக,  பாங்க்  ஆஃப்  பரோடா  வங்கிக்கு  ரூ.5,042  கோடியை  மூலதனநிதியாக  வழங்க  மத்திய  அரசு  முடிவு  செய்தது. 

அதைத்  தொடர்ந்து,  பாங்க்  ஆஃப்  பரோடா,  விஜயா  வங்கி,  தேனா  வங்கி  ஆகியவற்றின்ஒன்றிணைப்பு  வரும்  ஏப்ரல் 1 ஆம்  தேதி  முதல்  நடைமுறைக்கு  வருகிறது. 

இதுகுறித்து  ரிசர்வ்  வங்கி    வெளியிட்ட  அறிக்கையில், ” வங்கிகள்  இணைப்புக்குப்  பிறகு, விஜயா  வங்கி,  தேனா  வங்கி  ஆகியவற்றின்  வாடிக்கையாளர்கள்  இனி  பாங்க்  ஆஃப்பரோடாவின்  வாடிக்கையாளர்களாகவே  கருதப்படுவர்’  என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here