தெலுங்கு டெம்பர் படத்தின் இந்தி ரீமேக்கான சிம்பா இன்று வெளியானது. படம் முதல்நாளே பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட்டுள்ளது.

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர் நடிப்பில் உருவான படம் டெம்பர். தெலுங்கில் வெற்றி பெற்ற இந்தப் படத்தை ரன்வீர் சிங் நடிப்பில் இந்தியில் ரீமேக் செய்தார் ரோஹித் ஷெட்டி. இந்தியாவில் 4020 திரையரங்குகள், வெளிநாடுகளில் 963 திரையரங்குகள் மொத்தமாக 4983 திரையரங்குகள் என பிரமாண்டமாக படம் வெளியாகியுள்ளது. படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

அமீர்கானின் தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான், ஷாருக்கானின் ஸீரோ படங்கள் பாக்ஸ் ஆபிஸில் தோல்விகண்ட நிலையில் சிம்பாவின் வெற்றி ஆண்டு இறுதியில் இந்தி சினிமாவுக்கு ஆறுதல் அளித்துள்ளது.

விஷால் தற்போது நடித்துவரும் அயோக்யா திரைப்படம் இதே டெம்பர் படத்தின் தமிழ் ரீமேக் என்பது முக்கியமானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here