ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில், பொதுமக்கள் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்திலுள்ள பாலக்கோட்டின் தேவ்டா கிராமத்தில், பாகிஸ்தான் ராணுவம், ஞாயிற்றுக்கிழமை (இன்று) காலை அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

vaid

இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்ததாகவும், மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்ததாகவும் அம்மாநிலத்தின் டிஜிபி வாயித் தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலையடுத்து எல்லைப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

இதையும் படியுங்கள்: சிரியா: பட்டினியால் உண்டான போர் இது

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்