பாகிஸ்தான் பயணிகள் விமான விபத்து: வெளியான கடைசி நிமிட வீடியோ

At least two people have survived the crash of a Pakistan International Airlines (PIA) plane in Karachi that had 91 passengers and seven crew on board.

0
445

பாகிஸ்தானில் 99 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்களுடன் லாகூரில் இருந்து கராச்சி சென்ற விமானம் கராச்சியின் குடியிருப்பு பகுதியில், கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவத்தில் இதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியதால், இடிபாடுகளுக்கிடையே சிக்கியுள்ளவர்கள் இராணுவத்தினர் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்கும் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

EYo-NUwv-XQAA5-JVT

இதுகுறித்து, தனது டிவிட்டர் பக்கத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளியிட்ட பதிவில், விமான விபத்தால் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். கராச்சிக்கு புறப்பட்ட பிஐஏ தலைமை நிர்வாக அதிகாரி அர்ஷத் மாலிக் மற்றும் மீட்பு மற்றும் நிவாரண குழுக்களுடன் தொடர்பில் இருக்கிறேன். உடனடி விசாரணை தொடங்கப்படும். இறந்தவரின் குடும்பங்களுக்கு பிரார்த்தனைகள் மற்றும் இரங்கல்கள் என தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பாகிஸ்தானில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானப் போக்குவரத்து கடந்த சில நாட்களுக்கு முன்புதான் மீண்டும் உள்நாட்டு விமானச் சேவை தொடங்கப்பட்டது. இந்நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது, விமான விபத்தில் சிக்குவதற்கு முன்னர் சில நிமிடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here