பாகிஸ்தானைத் தோற்கடிக்க பத்தே நாட்கள் போதும் : பிரதமர் மோடி

0
1171

பாகிஸ்தானுடன் போர் ஏற்பட்டால் இந்தியப் படைகள் வெற்றிபெற பத்தே நாட்கள் போதும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் தேசிய மாணவர் படையின் பேரணியையொட்டி நடத்தப்பட்ட அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பிரதமர், என்சிசி படைப்பிரிவினரில் சிறந்து விளங்கியோருக்கு விருதுகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இளைஞர்களால் நாடு முன்னோக்கி செல்வதாக தெரிவித்தார். தீவிரவாதிகளை அவர்கள் இருப்பிடத்திற்கே சென்று அழிக்கும் துல்லியத் தாக்குதல்களை அவர் சுட்டிக் காட்டினார். பாகிஸ்தான் இந்தியாவுடன் இன்னொரு போரை நடத்த நினைத்தால் ஏழு முதல் பத்து நாட்களுக்குள் போரை வெல்லும் வலிமை இந்தியாவுக்கு இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்தியாவுடன் பாகிஸ்தான் பல ஆண்டுகளாக மறைமுகப் போரில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிட்ட மோடி , இந்தியாவிடம் 3 போர்களில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தது. இருந்தாலும், இந்தியாவுடன் மறைமுக போரில் ஈடுபட்டு வருகிறது. முந்தைய அரசுகள், இதை வெறும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையாக பார்த்தன.

கடந்த கால ஆட்சியாளர்கள் மிகப்பெரிய உரைகளை நிகழ்த்தினார்களே தவிர எல்லைத்தாண்டி தாக்கும் உத்தரவுகளைப் பிறப்பிக்கவில்லை என்றார். இதனால் பல ஆயிரம் அப்பாவி மக்கள் உயிரிழந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இரண்டு துல்லியத் தாக்குதல்களால் ஜம்மு காஷ்மீருக்கு அமைதி திரும்பியிருக்கிறது என்றும், தீவிரவாதம் மிகப்பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here