பாகிஸ்தானில் கராச்சி-ராவல்பிண்டி வழித்தடத்தில் இயக்கப்படும் தேஸ்காம் எக்ஸ்பிரஸ் ரெயில் தீப்பிடித்து எரிந்ததில் 67 பயணிகள் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் கராச்சி-ராவல்பிண்டி இடையே தேஸ்காம் எக்ஸ்பிரஸ் ரெயில் தினமும் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் (அக்-31)இன்று காலை ரகிம் யார் கான் அருகே உள்ள லியாகத்பூரில் சென்றுகொண்டிருந்தபோது ஒரு பெட்டியில் திடீரென தீப்பிடித்தது. காற்றின் வேகத்தில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. அருகில் உள்ள பெட்டிக்கும் தீ பரவியது.

இதையடுத்து ரெயில் நிறுத்தப்பட்டது. தீப்பிடித்த பெட்டிகளில் இருந்த பயணிகள் அலறியடித்துக்கொண்டு வெளியேறினர். சிலர் தீயில் சிக்கிக்கொண்டனர். 

மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தி உள்ளே சிக்கியவர்களை மீட்டனர்.

இந்த விபத்தில் 67 பேர் உயிரிழந்தனர். மேலும், 13 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here