பாகற்காய் தரும் நன்மைகள்

0
346

பெரும்பாலான மக்கள் பாகற்காயிலுள்ள கசப்பு சுவையால் அதை சாப்பிடாமல் ஒதுக்கி விடுகின்றனர். பாகற்காய் சாப்பிடுவதற்கு கசப்பாக இருந்தாலும், கல்லீரல் கொழுப்புகளைக் குறைக்கும் இனிப்பான வேலைகளை செய்கின்றன. ஒரு கப் அல்லது ½ கப் பாகற்காயை தினமும் உங்களுடைய உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன்களை நீங்கள் பெற முடியும். மேலும், நீங்கள் இதை சாறாகவும் குடிக்க முடியும்.

பாகற்காயில் உள்ள மோர்மோசிடின் மற்றும் ஷரடின் என இரண்டு கிலைசீமிக் பொருட்கள் தசைகளுக்கு  தேவைப்படும் சர்க்கரையை கொண்டு செல்லும் முக்கிய வேலையை செய்கின்றன.

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி ரத்த சுத்திகரிப்பானாகவும் செயல்படுகிறது.

மூன்று நாட்களுக்கு ஒரு முறை பாகற்காய் ஜுஸ் குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்காலாம்.

பாகற்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடண்ட்கள் விஷத்தன்மைவுள்ள அமிலத்தால் கண்களுக்கு எற்படும் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும்.

பாகற்காய் மற்றும் அதன் இலைகளையோ வெந்நீரில் வேக வைத்து தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் நோய்த்தொற்றுகள் அண்டாமல் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி கூடும். பாகற்காயில் நார்ச்சத்து மிகுந்துள்ளதால்,  இது செரிமானத்திற்கு மிகவும் உதவுகிறது. இதன் காரணமாக உணவு நன்றாக செரிக்கப்பட்டு கழி  வுகள் எளிதாக வெளியெ தள்ளப்படுகின்றது.

கசப்பு சுவை காரணமாக பாகற்காயை ஒதுக்கிவிடாமல், அவ்வப்போது அதை உணவில் செர்த்து கொண்டால் நல்லது. ஒரு கொடியை தூக்கித் தூக்க ஓராயிரம் பாகற்காய் என்று கிராமங்காளில் சொல்வார்காள். அப்படி கொத்தாகக் காய்க்கக் கூடியது பாகற்காய்,’இலைமறைவு காய்மறைவு’ என்ற பழமொழி பாகற்காய்க்கு மிகவும் பொருந்தும். காய் பெரிதாக வளரும் வரை அதன் நிறத்திளேயே கொடியின் நிறமும் பச்சையாக இருந்து காயைக் காப்பாற்றும்.

பாகற்காயில் உள்ள ஊட்டச்சத்து கூறுகள் :

 • மாவுச் சத்து
 • கொளுப்புச் சத்து
 • புரதச் சத்து
 • வைட்டமின்களான A B C E K
 • கனிமங்களான

    1.சுண்ணாம்பு சத்து

    2.இரும்பு சத்து

    3.பாஸ்பரஸ்

    4.சாம்பல் சத்து

    5.துத்தநாகம்

பாகற்காயின் மருத்துவ பயன்கள்

 • மூச்சு சீரின்மையை குணப்படுத்தும்.
 • இரத்தத்தில் உள்ள அதிக சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும்.
 • கல்லீரலை நோய் தாக்குதலில் இருந்து காக்கும்.
 • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
 • சிறுநீரக கற்களை அகற்றி அதனை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
 • இருதய ஆரோக்கியத்தைக் காக்கும்.
 • புற்றுநோய் அணுக்கள் பெருகாமல் தடுக்கும்.
 • இரத்ததைத் தூய்மைப்படுதும்.

பாகற்காயின் மகத்துவம்

நீரழிவு, இருமல், மூச்சிரைப்பு,ஆஸ்தூமா,மூலநோய்,வயிற்றில் பூச்சி தொல்லை இருபவர்களுக்கு மிகவும் ஏற்ற மருந்து பாகற்காய். பாகற்காய் இலையில் இருந்து எடுக்கும் சாறு பல நோய்களுக்கு அருமருந்தாகும்.இந்த இலையை அரைத்து உடல் முழுவதும் பத்துப்போட்டால் படை, சிரங்கு, அரிப்பு நிங்கிவிடும்.

பாகற்காய் உணவுப் பையிலுள்ள பூச்சியைக் கொல்லும். பசியைத் தூண்டும். பித்தத்தை தனிக்கும். இரண்டு வேலை ஒரு டீஸ்பூன் பாகற்காய் ஜீஸுடன் சர்க்கரை கலந்து சப்பிட்டால் உடலுக்குச் செரிமான திறனை மேம்படுத்தும். பாக இலையுடன் ஐந்தாறூ மிளகு சேர்த்து அம்மியில் அரைத்துப் பற்றுப் போட்டுவர மாலைக்கண் நோய் குணமாகும்.

பாகல் இலைச் சற்றை நிரையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு கண்ணாடி விரியன் கடித்த விஷம் நிக்கும். இதில் உள்ள வைட்டமின் சி கண்களுக்கு எற்படும் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும். பாகற்காய் கண் தோல் போன்றவற்றிற்கு நல்லது. இதில் இருமடங்கு கால்சியம்  பொட்டாசியம் உள்ளது. தசை நரம்பு மண்டலம் போன்றவற்றிற்கு நலன் பெற பொட்டாசியம் உதவுகிறது.

இவ்வாறு பல இனிப்பான பயன்களைத் தரும் பாகற்காயை தினமும் நம் உணவில் சேர்த்து உடல் நலமுடன் வாழ வாழ்த்துகிறோம்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here