அக்டோபர் 31, 2018 மாலை 5 மணி: சென்னை ஸ்டெர்லிங் சாலையிலிருந்து 147ஏ பஸ்ஸில் ஏறியதும் ஆச்சரியமாக இருந்தது. பின் இருக்கையில் இரண்டு பேர் குடை பிடித்தபடி அமர்ந்திருந்தார்கள். நடு இருக்கையில் ஒருவர் வெண்குடை பிடித்தபடி அமர்ந்திருந்தார். ”மதியம் டிப்போவிலிருந்து பஸ் எடுக்கும்போது வெயில் அடித்துக் கொண்டிருந்தது. எங்களது பஸ் எஃப்.சிக்கு (வருடாந்தர தகுதிச் சோதனை) போயிருக்கிறது. இப்படி பஸ் முழுக்க ஒழுகுமென்று எதிர்பார்க்கவில்லை” என்று நடத்துநர் எனக்கு விளக்கம் தந்தார்.
நவம்பர் 2, 2018 நண்பகல் 1 மணி: சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் 21ஆம் நம்பர் பேருந்து முன்னால் நடந்தது இந்த உரையாடல். ”இந்த ஜிபிஎஸ் போர்டு பார்த்து பயந்தே நிறைய பயணிகள் வண்டியில ஏறல” என்றார் நடத்துநர். குறைந்தபட்சம் 11 ரூபாய் முதல் அதிகபட்சம் 35 ரூபாய் வரை கட்டணம் உள்ள பஸ்களில் உள்ள ஜிபிஎஸ் (இடங்காணல் கருவி) குறைந்தபட்சம் 5 ரூபாய் முதல் அதிகபட்சம் 10 ரூபாய் கட்டணமுள்ள 21 எண் பேருந்திலும் இருப்பதால் மக்கள் குழம்பியிருக்கிறார்கள். பின்னர் சாதாரண கட்டணம் என்று சின்னதாக போர்டு வைத்துள்ளார்கள். அது மக்களுக்குப் புலப்படவில்லை.
“சாதாரண கட்டணம்” என்று பெரிய போர்டு வைத்தும் பிரயோஜனம் இல்லை. அப்புறம்தான் குறைந்தபட்சம் ரூ.5 என்று பெரிதாக ஒட்டியிருக்கிறார்கள். இப்போது எளிய மக்கள் ”சாதாரண கட்டணப்” பேருந்துகளை அடையாளம் காண்பது முன்னைவிட எளிதாகியிருக்கிறது.
இதற்கு முந்தைய பஸ் கதைகளை இங்கே படியுங்கள்.

ஒயிட்போர்டு

சென்னைப் பெருநகரப் பேருந்துகளில் குறைந்தபட்சம் ஐந்து ரூபாய் போர்டு வந்ததால் மக்களுக்கு நன்மை
சென்னைப் பெருநகரப் பேருந்துகளில் குறைந்தபட்சம் ஐந்து ரூபாய் போர்டு வந்ததால் மக்களுக்கு நன்மை

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here