“பவர்ஃபுல் ரோலில் நடிக்கிறேன்” – சிம்ரனை பரவசப்படுத்திய சிவகார்த்திகேயன் படம்

0
253
Simran

சிம்ரன்… ஒருகாலத்தில் ஒருகோடி இளைஞர்களின் இதயங்களில் ஒலித்த பெயர். இன்று சமந்தா, ஹன்சிகா, காஜல் அகர்வால் என்று ஒரு டஜன் பெயர்களுக்கு அடியில் காணாமல் போய்விட்டது. சிம்ரனை கடைசியாகப் பார்த்தது பார்த்திபனின் கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தில். படம் முக்கால் நாள் ஓடியதால் சிம்ரனை முழுதாக ரசிக்க முடியவில்லை. இதோ சிவகார்த்திகேயன் படம் வரமாக வந்திருக்கிறது முன்னாள் சிம்ரன் ரசிகர்களுக்கு.

இதையும் படியுங்கள் : பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு; 10 தகவல்கள்

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி நடிக்கும் படம் தென்காசியில் தொடங்கியுள்ளது. இந்தப் படத்தில் சிம்ரனும் நடிக்கிறார். “சிவகார்த்திகேயன், சமந்தா என்ற இந்த டீமுடன் நடிப்பதில் ரொம்பவும் மகிழ்ச்சி. முக்கியமாக இயக்குனர் பொன்ராம். அவரது படங்களில் நகைச்சுவைக்கு பெரிய இடம் இருக்கும். இந்தப் படத்தில் எனக்கு பவர்ஃபுல்லான வேடம்” என்றார் பூரிப்புடன் சிம்ரன்.

இதையும் படியுங்கள் : செல்போன் திரையையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? இதைப் பாருங்கள்

சிம்ரனின் இரண்டாம் வருகை பல படங்களில் நடித்தும் இன்னும் முழுமையாக அமையவில்லை. பொன்ராம் படம் சிம்ரனின் செகண்ட் இன்னிங்ஸை ட்ரிகர் செய்யும் என்ற நம்பிக்கை சிம்ரனுக்கே ஏற்பட்டிருக்கிறது. முகத்தில் பல்பு போட்டது போல் அப்படியொரு பிரகாசம்.

இதையும் படியுங்கள் : #MTCBus: இந்தப் பேருந்தின் லட்சணத்தைப் பாருங்கள்

சிம்ரனின் நம்பிக்கை பலிக்கட்டும்.

இதையும் படியுங்கள் : வில்லேன்டா… இரண்டு கெட்டப்புகளுடன் சாமியுடன் மோதும் பாபி

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்