முருகப்பெருமான் அவதாரம் செய்ததாக சாஸ்திரங்கள் கூறும் வைகாசி மாத பவுர்ணமி நாளை ‘வைகாசி விசாகம்’ என்று குறிப்பிடுகிறோம்.

விசாகம் என்னும் நட்சத்திரம் ஆறு நட்சத்திரங்களின் கூட்டமைப்பாகும். இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம். தேவர்களுக்கும், உலக உயிர்களுக்கும் துன்பம் விளைவித்த சூரபதுமன் மற்றும் அவனது சகோதரர்களை அழிப்பதற்காக, சிவபெருமானின் சக்தியாக ஆறுமுகங்களுடன் தோன்றியவர் முருகப்பெருமான்.

இதையொட்டி பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் நேற்று காலை முத்துக் குமாரசுவாமி வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கொடி மரத்திற்கு கும்பகலச அபிஷேக பூஜையுடன் வைகாசி விசாகத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

மே 27-ம் தேதி இரவு முத்துக்குமாரசுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. மே 28-ல் வைகாசி விசாகத்தன்று மலைக்கோயில் அதிகாலை நடை திறக்கப்பட்டு, அன்று மாலை பெரியநாயகியம்மன் கோயில் ரதவீதியில் தேரோட்டம் நடைபெறுகிறது.

‘வைகாசி விசாகம்’ நாளில் அனைத்து முருகன் கோவில்களிலும் வைகாசி விசாகத் திருநாள் மிகச் சிறப்பாக நடைபெறும்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்