கேரளாவில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்துக்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை (நேற்று), கேரள மாநிலம் பாலக்காடு அட்டப்பாடி பகுதியில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த மது (27), என்பவர், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறி அப்பகுதி மக்கள் அவரை மரத்தில் கட்டிவைத்து கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அவர் அங்கு உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

tribal

அந்த நபரைத் தாக்கும்போது, அங்கிருந்தவர்கள் அதனை செல்ஃபி எடுத்து, சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்துக்கு இந்தச் சம்பவத்துக்கு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: குஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் போராட்டம்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here