கேரளாவில் பழங்குடி நபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பான அறிக்கையை அளிக்கும்படி மாநில அரசுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

கடந்த வியாழக்கிழமை, கேரள மாநிலம் பாலக்காடு அட்டப்பாடி பகுதியில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த மது (27), என்பவர், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறி அப்பகுதி மக்கள் அவரை மரத்தில் கட்டிவைத்து கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அவர் அங்கு உயிரிழந்தார். அந்த நபரைத் தாக்கும்போது, அங்கிருந்தவர்கள் அதனை செல்ஃபி எடுத்து, சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான், ஹூசைன் முகமது, அப்துல் லத்தீஃப், அப்துல் கரீம், உபை, மனு தாமோதரன் உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனிடையே, இக்கொலை சம்பவத்தைக் கண்டித்து கேரளாவின் பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு, மத்திய அரசு கேரள அரசிடம் கேட்டுள்ளது. மேலும், மதுவின் குடும்பத்தினருக்கு மாநில அரசு 10 லட்சம் ரூபாய் நிதியுதவியை அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்: குஜராத் படுகொலை பிரதான நாயகனின் முகமூடியைக் கிழிக்க நெருப்பாற்றில் நீந்தும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியின் போராட்டம்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here