மாணவர்கள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தும் அபாயகரமான சூழலைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையி‌ல், கடந்த 3 ஆண்டுகளில் 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களின் இடைநிற்றல் 100 சதவிகிதம் அதிகரித்துள்ளது என நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் வெளியிட்டிருக்கும் தகவல் அதிர்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2016- 17 ஆம் ஆண்டில் 8 சதவிகிதமாக இருந்த இடைநிற்றல், 2017-18 ஆம் ஆண்டில் 16 சதவிகிதமாக அதிகரித்திருப்பது மத்திய மனிதவள அமைச்சர் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதேநேரம் தமிழக அரசு சட்டமன்றத்தில் வைத்த கொள்கை விளக்கக் குறிப்புகளில், இடைநிற்றல் 2016-17-ஆம் ஆண்டில் 3.75 சதவிகிதம் எனவும், 2017-18 இல் 3.61 சதவிகிதம் என தவறான தகவல் இடம்பெற்று உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் ஒரு மாணவர்கூட பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தும் அபாயகரமான சூழல் இனி எழாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here