ஹரியானா மாநிலத்தில், ராஜ்கீயா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பரிமாறப்பட்ட மதிய உணவில் குட்டி பாம்பு ஒன்று இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவில் பாம்பு இருப்பதை அறிந்து மாணவர்கள் உடனடியாக சாப்பிடுவதை நிறுத்தி விட்டார்கள். ஆனால் சில மாணவர்கள் உணவைச் சாப்பிட்டதால், அவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர், ப்ரஜ் பாலா, உயர் அதிகாரிகள் மற்றும் இஸ்கான் உணவு நிவாரண நிறுவனம், மதிய உணவு வழங்கும் உணவு நிறுவனம் ஆகியவற்றிற்கு தகவல் அளித்துள்ளார். இதே உணவு வழங்கப்பட்ட மற்ற பள்ளிகளும் இதுபோன்ற புகார்களைக் கூறியுள்ளனர்.

இதையும் படியுங்கள் : ‘தமிழகத்தில் கியா நிறுவனம் தொழில் தொடங்காதது ஏன்?’

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்