பள்ளிக் கல்வி தரவரிசைப் பட்டியல் : தமிழகத்திற்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

0
1034

ஆசிரியர் -மாணவர் விகிதம், மாணவர்களின் தேர்ச்சி விகிதம், பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதி, நிதிகளை திறம்பட கையாளுதல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படை கொண்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட 20 பெரிய மாநிலங்கள், கோவா, சிக்கிம், நாகாலாந்து உள்ளிட்ட 8 சிறிய மாநிலங்கள் மற்றும் டெல்லி, சண்டீகர், புதுச்சேரி உள்ளிட்ட 7 யூனியன் பிரதேசங்கள் என மூன்று விரிவான பிரிவுகளின் கீழ் இத்தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

2015 -16 மற்றும் 2016- 17 கல்வியாண்டுகளில் பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு மாநிலங்களின் செயல்பாடுகளை ஒப்பிட்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

நிதி ஆயோக்  வெளியிட்டு உள்ள 2016-2017 ஆம் ஆண்டு பள்ளி கல்வியின் தர வரிசை பட்டியலில் நாடு முழுவதும்  பெரும் வேறுபாடுகள் இருப்பது தெரிகிறது.

கற்றல் முடிவுகள், அணுகல் மற்றும் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள், கணக்கெடுப்புத் தரவைப் பயன்படுத்துதல், மாநிலங்களிலிருந்து சுய அறிக்கை தரவு மற்றும் மூன்றாம் தரப்பு சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில்  மாநிலங்கள் பள்ளி கல்வி தரக் குறியீடு மதிப்பிடப்படுகிறது.

பள்ளி கல்வியின் தரத்தில்  ஒட்டுமொத்த செயல்திறன் மதிப்பெண் பட்டியலில் 20 பெரிய மாநிலங்களில், கேரளா 76.6 சதவீத மதிப்பெண்ணுடன்  முதல்  இடத்திலும்,  உத்தரபிரதேசம் 36.4 சதவீத  மதிப்பெண்களுடன் கடைசி இடத்திலும் உள்ளது.

தமிழகம் 73.4 சதவீதத்துடன் 2-வது இடத்தில் உள்ளது. கடந்த 2015-2016 ஆம் ஆண்டில் 63.2 சதவீதமாக இருந்தது. 

அரியானா, அசாம் மற்றும் உத்தரபிரதேசம் ஆகியவை 2015-16 ஆம்  ஆண்டை ஒப்பிடுகையில், 2016-17 ஆம் ஆண்டில் அவர்களின் செயல்திறனில் அதிக முன்னேற்றத்தைக் காட்டுகின்றன.

அணுகல் மற்றும் பலன் விளைவுகளில் தமிழகம் முதலிடம் வகித்தது, கர்நாடகா கற்றல் முடிவுகளில் முன்னிலை வகித்தது. அரியானாவில் சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் இருந்தன.

சிறிய மாநிலங்களில், மணிப்பூர் சிறந்ததாக உருவெடுத்து உள்ளது. யூனியன் பிரதேசங்களின் பட்டியலில் சண்டிகர் முதலிடத்தில் உள்ளது. மேற்கு வங்க மாநிலம்  மதிப்பீட்டு செயல்பாட்டில் பங்கேற்க மறுத்துவிட்டது. அதனால்  தரவரிசையில் சேர்க்கப்படவில்லை.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here