பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

0
89

தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு இம்மாதம் 19 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம்: 

  • 1. அனைத்து மாணவர்களும், ஆசிரியர்களும் பணியாளர்களும்பள்ளி வளாகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் முகக் கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும்.
  • 2. தனியார் பள்ளி நிர்வாகங்கள்எழுத்துபூர்வ இசைவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அளித்த பின்னர் தங்கள் பள்ளிகளைதிறக்கலாம்.
  • 3. கட்டுப்பாட்டு மண்டலங்களில்வ சிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் பள்ளிக்கு வருகை புரிய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
  • 4. கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பள்ளிகள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்படும்.
  • 5. இணையவழி தொலைதூர கற்றல்முறை ஒரு மாற்று கற்பித்தல் முறையாக தொடரும்.
  • 6. பள்ளிகள் இணையவழியில் வகுப்புகளை நடத்தும்போது சில மாணவர்கள் நேரடியாக பள்ளிக்கு வருவதை விட இணையவழி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பினால் அவர்கள் அவ்வாறு கலந்து கொள்ள அனுமதிக்கப்படலாம்.
  • 7. பெற்றோரின் எழுத்துபூர்வ இசைவுக் கடிதத்துடன் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவர்.
  • 8. பெற்றோரின் சம்மதத்துடன் வீட்டிலிருந்து படிக்க விரும்பும் மாணவர்கள் அவ்வாறே அனுமதிக்கலாம்.
  • 9. மாணவர்களின் வருகையை கட்டாயப்படுத்தக்கூடாது. அது முழுவதும் பெற்றோரின் சம்மதத்தை சார்ந்து இருக்கவேண்டும்.
  • 10. அத்தகைய மாணவர்களின் கற்றல் விளைவுகளின் முன்னேற்றத்திற்கு தக்க முறையில் திட்டமிடவேண்டும்.
  • 11. அனைத்து மாணவர்களுக்கு வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் சுகாதாரத் துறையால் வழங்கப்படும்.
  • 12. பள்ளிகள் மீண்டும் திறக்கஅனுமதிக்கப்படும்போது, அரசால் வெளியிடப்படும் இந்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயாமாக பின்பற்ற வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here