அரையாண்டுத் தேர்வு விடுமுறை நீட்டிக்கப்பட்டு, ஜனவரி 4 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து ஜனவரி 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார்.
அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகள், அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்கு பின் வரும் திங்கட்கிழமை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நாளை பள்ளிகள் திறக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.