கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே ஆரம்பித்த காரணத்தால் கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், பாலக்காடு, காசர்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் மிகப்பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவிற்கு பெய்து வரும் பலத்த மழையினால் இந்த 6 மாவட்டங்களிலும் வரலாறு காணாத சேதம் ஏற்பட்டுள்ளது.

கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களில் நிலச்சரிவில் சிக்கி பலியானோரே அதிகம். 1½ வயது குழந்தை உள்பட 10-க்கும் மேற்பட்டோர் இங்கு இறந்துள்ளனர். வீடு இடிந்தும், மின்சாரம் தாக்கியும் 45 பேர் பலியாகி உள்ளனர்.

நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கவும், இடிபாடுகளில் உயிர் இழந்தவர்களின் பிணங்களை மீட்கவும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவிலிருந்து 50 வீரர்கள் கோழிக்கோடு சென்றனர்.

அவர்கள், நவீன கருவிகள் மூலம் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். நேற்று 1½ வயது குழந்தை ரிபா மரியம், 17 வயது வாலிபர் அபினவ் ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டன.குழந்தை ரிபா மரியத்தின் தாயார் உள்பட இன்னும் 6 பேர் உடல்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. இதற்காக மோப்ப நாய்களும் கொண்டு வரப்பட்டுள்ளன.

இதே போல் இடுக்கி மாவட்டத்தில் 16 பேர் பலத்த மழையினால் இறந்துள்ளனர்.பல வீடுகள், சாலைகள் சேதமடைந்தன. மீட்பு பணிகள் இங்கும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

மழையால் மிகவும் பாதிக்கப்பட்ட 6 மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்-மந்திரி பினராயி விஜயன் ஆலோசனை நடத்தினார். மழை பாதித்த பகுதிகளில் நிவாரண முகாம்கள் அமைக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here