நம் முன்னோர்கள் உணவு சாப்பிட்ட பின் ஒன்றிரண்டு துளசி இலைகளை வாயில் போட்டு மென்று சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்

நம் முன்னோர்கள் உணவு சாப்பிட்ட பின் ஒன்றிரண்டு துளசி இலைகளை வாயில் போட்டு மென்று சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இது வாயில் துர்நாற்றத்தை போக்கி, செரிமானத்தை தூண்டுகிறது. புதினா இலைகள் வாய் பராமரிப்பிற்கு மிகவும் நல்லது. ஆக்ஸிஜன் குறைவான இடத்தில் வாழக்கூடிய அனரோபிக் பாக்டீரியாவை கொல்லும் தன்மை புதினாவிற்கு உண்டு. இந்த பாக்டீரியா எப்போது வாய் பகுதியில் இருந்து ஈறு மற்றும் பல் பிரச்சனைகளை உண்டாக்கும். புதினாவில் மெந்தால் இருப்பதால் வாயில் குளிர்ச்சி தன்மையை உண்டாக்கும். மௌத் வாஷ் அல்லது டூத் பேஸ்ட் பயன்படுத்துவதற்கு ஒப்பானது புதினா.


வாய் பராமரிப்பிற்கு உதவும் புதினா

* புதினாவில் ஆண்டிபாக்டீரியல் மற்றும் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருப்பதால் வாயில் உள்ள பாக்டீரியாவை அழித்துவிடும். மேலும் வாயில் எவ்வித நோய் தொற்றும் பரவாமல் பாதுகாக்கும்.

* பல் பிடுங்கிய பின் இரத்தம் நிற்காமல் வெளியேறினால் உடனடியாக புதினாவை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம். இதனால் ஈறுகளில் வீக்கம் குறைந்து, இரத்தம் வெளியேறுவது நிற்கும்.

* புதினா இலையில் பொட்டாஷியம், மக்னீஷியம், கால்ஷியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்பு சத்து இருப்பதால் பல் மற்றும் கடவாய் பகுதியில் உள்ள எலும்புகளை உறுதியாக்கும்.

* புதினாவில் உள்ள வைட்டமின் மற்றும் தாதுக்கள் பற்கள் மற்றும் ஈறுகளை வலிமையாக வைத்திருக்க உதவும்.

* உடலில் அமிலத்தன்மை அதிகமாக இருப்பின் பல் சொத்தை மற்றும் ஈறு பிரச்சனைகள் உருவாகும் என்பதால் புதினாவை சாப்பிடலாம்.
புதினா காரத்தன்மை மிக்கது என்பதால் அமிலத்தன்மையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும்.

* புதினா இலைகளை அவ்வப்போது வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் வாய் புத்துணர்ச்சியாக இருக்கும்.

எப்படி பயன்படுத்துவது?

தினமும் புதினா இலைகளை அப்படியே சாப்பிட்டு வரலாம். புதினா எண்ணெய் மற்றும் பேக்கிங் சோடா இரண்டையும் தண்ணீரில் கலந்து மௌத் வாஷாக பயன்படுத்தலாம். சாப்பிட்டு முடித்த பின் புதினா டீ குடித்து வந்தால் வாயில் இருக்கக்கூடிய பாக்டீரியா இறந்துவிடும். பின் ஜீரணமும் சீராக இருக்கும்.

courtesy: ndtv

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here