பருவ மழைக் காலத்தின் போது நோய் தொற்று, அலர்ஜி, கட்டிகள் மற்றும் மலேரியா, காலரா போன்ற நோய்களும் பரவும். அதனை எதிர்த்து போராட உங்கள் உடலை தயார் செய்து கொள்வது அவசியமாகும். அதற்கு நீங்கள் சரியான உணவை உட்கொள்ளவேண்டும். சூடான காய்கறி மற்றும் கோழி சூப்பைப் போல மற்றோரு உணவும், சாப்பிடுவதற்காக பரிந்துரைக்க்கப்படுகிறது அவை தான் பழங்கள். மழைக்காலங்களில் உடலில் செரிமானத் தன்மை குறையும் போது அதைச் சரி செய்ய பழங்கள் உதவுகின்றன.

peach-image-free-1

பீச்

பீச் பழம் வாங்கும் போது மஞ்சள், ஆரஞ்சு நிறத்தில் இருக்கிறதா என்றும், அழுத்தி பார்த்து பழங்களை வாங்குவதும் நல்லது. பீச்சில் அதிக நார் சத்து மற்றும் குறைந்த கலோரிகள் உள்ளன. இதில் வைட்டமின் ஏ மற்றும் பி, கரோட்டின் அதிகமாக உள்ளது. பீச்சில் உள்ள வைட்டமின் சி சருமத்துக்கு ஆரோக்கியத்தை தருகிறது.

apples-prostate-cancer-curing-foods

ஆப்பிள்

ஆப்பிள் எல்லா காலத்திற்கும் பரிந்துரைக்கப்படும் பழமாகும். இதில் அனைத்து வைட்டமின் சத்துக்களும் உள்ளன. விட்டமின் ஏ ,பி1,பி2 மற்றும் சி . மினரல்ஸ் பாஸ்பரஸ், அயோடின் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து ஆகிய பல சத்துக்கள் உள்ளன. இவை அனைத்தும் எலும்பு, தோல், நரம்பு, மற்றும் மூளை போன்றவற்றின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

141

நாவல் பழம்

நாவல் பழத்தில் அதிகமாக வைட்டமின்,போட்டாசியம் , இரும்புச் சத்துக்கள் அடங்கியுள்ளன. இவை அனைத்தும் மழைக்காலத்தில் உட்கொள்ள சிறந்த பழமாகும். இது சிறுநீரகம் மற்றும் கல்லீரல் ஆகியவற்றிற்கு நல்லது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது.

Nema-Litchi-Fruit-Seeds-10-SDL205900744-1-c3b03

லிச்சி

லிச்சியில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட், மூச்சுத் திணறல் மற்றும் சுவாச கோளாறுகளை சரி செய்து உடல் எடையைக் குறைக்கிறது. லிச்சி நோய் எதிர்ப்பு மண்டலத்தை சிறந்த முறையில் பாதுகாக்கிறது. இதில் உள்ள ஃபைர் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. இதில் உள்ள வைட்டமின்கள் முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை நீக்குகிறது.

e0a70f72bdae9885bfc32d7cd19a26a1_XL

செர்ரி

மழைக்காலத்தில் அதிகமாக கிடைக்கும் செர்ரி பழம் குறைந்த கலோரிகள் ஆன்ட்டி ஆக்சிடன்ட் கொண்டது. இதனால் செர்ரி பழத்தை உண்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கிருமிகளின் எதிரியாக போராடும். செர்ரி பல வகையான பயன்களை கொண்டது. இது ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும். புற்றுநோய் செல்களை அழிக்கும். இதில் உள்ள சத்துக்கள் ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.

Pomegranate

மாதுளை

மாதுளையில் உள்ள சத்துக்கள், மழைக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட், கிருமித் தொற்று, உயர் ரத்த அழுத்தம், புற்று நோய், இருதய நோய் ஆகியவற்றில் இருந்து பாதுகாக்கிறது. இதில் உள்ள பி வைட்டமின். மற்றும் ஃபோலேட் சிவப்பு ரத்த அணுக்கள் உடல் முழுவதும் பரவுவதற்கு உதவுகிறது.

1200-8941-plums-photo2

பிளம்ஸ்

பிளம்ஸ் பழத்தில் சத்து மிகுந்த ஃபைபர் , காப்பர், போட்டாசியம் , விட்டமின் சி மற்றும் கே அதிமாக உள்ளது. இதில் உள்ள சிவப்பு நிற அந்தோசயனிசிஸ் கேன்சர் செல்களுக்கு எதிராக போராடும் சக்தி வாய்ந்தது. மேலும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. மலச்சிக்கலை சரிசெய்கிறது. இரும்பு சத்துக்களை தக்க வைத்து கொள்கிறது. ரத்த சோகையை குணப்படுத்தும் தன்மை கொண்டது.

(இத் தகவல் பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here