இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான 2வது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது.

இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் நடந்த முதலாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இன்றிய போட்டியில் வெற்றி பெற்று முதல் டி20 போட்டியில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க வேண்டிய நெருக்கடியில் இந்திய வீரர்கள் உள்ளனர். இதில் வெற்றி பெற்றால் தான் தொடரை சமன் செய்ய முடியும். ஷிகர் தவானுக்கு முதல் ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. இன்றைய ஆட்டத்தில் அவர் விளையாட வாய்ப்புள்ளது.

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தொடக்க ஆட்டத்தில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியது. இருந்தபோதிலும் பேட்டிங்கில் மேக்ஸ்வெல் அரைசதம் அடித்து வெளியேறியதும் தடுமாற்றத்திற்குள்ளானது. அதன்பின் தடுமாறிய ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மன்கள் ஒருவாறாகச் சமாளித்து கடைசி பந்தில் வெற்றி கண்டது.

இன்று போட்டி நடைபெறும் பெங்களூரு மைதானம் பொதுவாக பேட்டிங்குக்கும், சுழற்பந்து வீச்சுக்கும் ஏற்ற வகையில் இருக்கும். இங்கு இதுவரை ஐந்து டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் இந்திய அணி 3 போட்டிகளில் ஆடி 2 வெற்றியும்(இங்கிலாந்து, வங்கதேசம்), ஒரு போட்டியில் தோல்வியும் (பாகிஸ்தானுக்கு எதிராக) கண்டுள்ளது.

இங்கு இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் டி20 போட்டியில் மோதப்போவது இதுவே முதல் முறையாகும்.

அணிகளின் விபரம் :

இந்திய அணி : லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா அல்லது ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), ரிஷாப் பான்ட், விஜய் சங்கர் அல்லது தினேஷ் கார்த்திக், டோனி, குருணல் பாண்ட்யா, உமேஷ் யாதவ் அல்லது சித்தார்த் கவுல், யுஸ்வேந்திர சாஹல், மயங்க் மார்கண்டே, ஜஸ்பிரித் பும்ரா.

ஆஸ்திரேலிய அணி : மார்கஸ் ஸ்டோனிஸ், டார்சி ஷார்ட், ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), மேக்ஸ்வெல், பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப், ஆஷ்டன் டர்னர், நாதன் கவுல்டர்-நிலே, கம்மின்ஸ், ஜெயே ரிச்சர்ட்சன், ஜாசன் பெரேன்டோர்ப், ஆடம் ஜம்பா.

இந்தப் போட்டியின் நேரடி ஒளிபரப்பை இரவு 7 மணி முதல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் காணலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here