மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்தபடி, பயிர்களை இழந்த சுமார் 2000 விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.

அதில், 773 விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் இழப்பீட்டுத் தொகையாகவும், 669 விவசாயிகளுக்கு ரூ.2 இழப்பீட்டுத் தொகையாகவும், 50 விவசாயிகளுக்கு ரூ.3 இழப்பீட்டுத் தொகையாகவும், 702 விவசாயிகளுக்கு ரூ.4 இழப்பீட்டுத் தொகையாகவும், 39 விவசாயிகளுக்கு ரூ.5 இழப்பீட்டுத் தொகையாகவும் , பயிர்க் காப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகை அவர்கள் கையில் பணமாகவோ, காசோலையாகவோ வழங்கப்படவில்லை. நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளது பயிர்க் காப்பீட்டு நிறுவனம்.

மாகாராஷ்ர மாநிலத்தில் தான் இவ்வாறு நடந்துள்ளது . இங்கு தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக ஆண்டு வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தின் தெஹ்சில் பகுதி அமைந்துள்ள மாவட்டத்தில் இருந்துதான் பயிர்க்காப்பீடு கோரி அதிகப்படியான விண்ணப்பங்கள் வந்திருந்தன.

அதன் அடிப்படையில் சுமார் 2000 விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. பயிர்க் காப்பீடு பெற்ற விவசாயிகளின் பட்டியலை பீட் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியும் சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

அவர்களுக்கான இழப்பீட்டுத் தொகை வங்கிகளில் வரவு வைக்கப்பட்டிருப்பதாகவும் வங்கி அதிகாரி கூறியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் சுமார் 11,68,359 விவசாயிகள் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன.

கேஜ் தெஷில் பகுதியில் உள்ள 15,691 விவசாயிகள் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்துக்காக ரூ.51.42 லட்சத்தை பயிர்க் காப்பீட்டு நிறுவனங்களுக்கு செலுத்தியுள்ளனர்.

மாவட்ட கூட்டுறவு மத்திய வங்கிதான் பயிர் கடன் வழங்கி வருகிறது. பீட் மாவட்டத்தில் உள்ள மாவட்ட கூட்டுறவு மத்திய வங்கி பயிர்க் காப்பீட்டுத் தொகை பெற்ற விவசாயிகளின் பட்டியலை வெளியிட்டது .

பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் இந்த பயிர்க் காப்பீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

விவசாயிகள் தங்களுக்குக் கிடைத்திருக்கும் இழப்பீட்டுத் தொகையால் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார்கள். விவசாயிகள் இது குறித்து கூறும் போது , காப்பீட்டு நிறுவனங்கள் இது போன்ற ஒன்றுக்கும் உதவாத தொகையைச் செலுத்தும் அல்லது பயிர் காப்பீடு தராமல் இழுத்தடிக்கும்.

2018 , மே மாதம் ரூ2200 கோடி பயிர் காப்பீடுக்காக ஒர்துக்கப்பட்டுள்ளது என்று அரசாங்கம் அறிவித்தது. அதில் வெறும் ரூ165 கோடி அதாவது 7 சத்வீதமே பயிர் காப்பீடு தொகையாக மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here