சவூதி அரேபியாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலைவாய்ப்புள்ளதாக தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை

சவூதி அரேபியாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பிஎஸ்சி தேர்ச்சியுடன், ஹீமோடயாலிசிஸ் பிரிவில் இரண்டு வருட பணி அனுபவம் பெற்ற ஆண்/பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்படும் செவிலியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.54,000/- மாத ஊதியமும், அதிகபட்ச ஊதியம் தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப வேலையளிப்போரால் நிர்ணயிக்கப்படுவதுடன் இலவச இருப்பிடம், விமான டிக்கெட், உணவு, மருத்துவகாப்பீடு முதலியவை வழங்கப்படும்.

நேர்முகத்தேர்வு ஜூலை மாதம் மூன்றாவது வாரத்தில் சென்னை மற்றும் பெங்களூருவில் வேலைளிப்போரால் நடைபெற உள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள ஹீமோடயாலிசிஸ் செவிலியர்கள் 9.7.2017க்குள் ovemcleq074@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு omcmanpower.com என்ற வலைதளத்திலும், 044-22505886/22502267/22500417/8220634389 ஆகிய தொலைபேசி எண்கள் வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம்.

இதையும் படியுங்கள் : வெட்கக்கேடு… தமிழக அரசை விளாசிய நடிகர் சித்தார்த்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்