சவுதி அரேபியாவில் பிஎஸ்சி/டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புள்ளதாக தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : நாங்க இன்னும் ஒண்ணாதான் இருக்கோம் – விவாகரத்து வதந்திக்கு ரம்யா கிருஷ்ணன் விளக்கம்

இது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை :

சவூதி அரேபியாவில் உள்ள ஒரு முன்னணி தனியார் மருத்துவமனைக்கு பிஎஸ்சி/டிப்ளமோ தேர்ச்சியுடன், ஹீமோடயாலிசிஸ் பிரிவில் தொடர்ந்து இரண்டு வருட பணி அனுபவம் பெற்ற 150 ஆண்/பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். தேர்ந்தெடுக்கப்படும் செவிலியர்களுக்கு தகுதி மற்றும் அனுபவத்திற்கேற்ப மாதம் ரூ.55,000/- ஊதியத்துடன், இலவச இருப்பிடம், விமான டிக்கெட், உணவு, மருத்துவகாப்பீடு முதலியவை வழங்கப்படும்.

இதையும் படியுங்கள் : உங்களுக்கு ரத்த அழுத்தமா? இந்தக் கஷாயம் உதவும்

விருப்பமும் தகுதியும் உள்ள செவிலியர்கள் www.omcmanpower.com என்ற இந்நிறுவன வலைதளத்திற்குச் சென்று ஆன்லைன் சேவையில் ஹீமோடயாலிசிஸ் செவிலியர்பணியிடத்திற்கு 18.5.2017க்குள் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பதிவு செய்த மனுதாரர்கள் மட்டும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்மேலும் விவரங்களுக்கு 044-22505886/22502267/22500417 ஆகிய தொலைபேசி எண்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்