டி.என்.பி.எஸ்.சி.யில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வருடாந்திர தேர்வு அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி-யில் மொத்தம் 3,781 காலிப்பணியிடங்களை உள்ளடக்கிய 28 பணிகளுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அட்டவணையின்படி குரூப்-2 பிரிவில் உள்ள 682 பணிகளுக்கான அறிவிப்பு ஏப்ரல் முதல் வாரத்திலும், 494 வி.ஏ.ஓ. பணிகளுக்கான தேர்வு அறிவிப்பு ஜுன் முதல் வாரத்திலும், குரூப்-4 பிரிவில் உள்ள 1788 பணியிடங்களுக்கான அறிவிப்பு செப்டம்பர் முதல் வாரத்திலும் வெளியாகும். மேலும் விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

இதையும் படியுங்கள் : அழகிய கடன்: பள்ளிவாசலை ஸ்மார்ட் ஆக்கிய ஐ.ஏ.எஸ் அகடமி

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்