வாட்ஸ் அப் நிறுவனம் யனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாத்துக் கொள்ள ஃபிங்கர் பிரிண்ட் லாக் வசதியை பீட்டா வெர்ஷனில் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.

வாட்ஸ்அப்பை 2014 இல் ஃபேஸ்புக் நிறுவனம் 19 பில்லியன் டாலருக்கு வாங்கிக்கொண்டது. அதன் பின்னர் வாட்ஸ்அப்பில் யனாளர்களின் தகவல் பாதுகாப்பை உறுதிப்படுத்த அடுத்தடுத்து பல அப்டேட்களை அது வழங்கி வருகிறது. ‌

அந்த வகையில் வாட்ஸ் அப் நிறுவனம் கடந்த ‌ஜ‌னவரி மாதம் பயனாளர்களின் தகவல் பரிமாற்றங்களில் பாதுகாப்பை அதிகரிக்க ஃபிங்கர் பிரிண்ட்டின் மூலமாக வாட்ஸ் அப்பிற்குள் நுழையும் வசதியை கொண்டுவரவுள்ளதாக அறிவித்தது. இந்தப் புதிய அம்சம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில்‌ சோதிக்கப்பட்டு, ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷன் 2.19.221ல் நடைமுறைக்கு வந்துள்ளது.

அதன்படி அப்டேட் செய்யப்பட்ட வாட்ஸ் அப்பில் உள்ள, அக்கவுண்ட் ஆப்ஷனுக்கு சென்று அதிலுள்ள பிரைவேசி ஆப்ஷனை கிளிக் செய்தால் FINGER PRINT LOCK என்ற வசதி கொடுக்கப்பட்டுள்ளது அதனை ஆன் செய்தால் ‌‌கை ரேகை கேட்கும்‌. பயனாளர் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வாட்ஸ் அப் லாக் ஆ‌‌கிவிடும். 

அதன்பிறகு பயனர்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்துவதற்கு ‌அவர்களின் கைரேகை அவசியம். மேலும், நாம் ஒருவருக்கு ஃபார்வேர்டு செய்யும் செய்தி எத்தனையாவது முறையாக பரிமாறப்பட்டுள்ளது என்ற ஆப்ஷனும் அப்டேட் செய்யப்பட்டுள்‌ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here