வாட்ஸ் ஆப் நிறுவனம் ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்வுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் பயனர்களின் சாட் விவரங்களை பாதுகாக்க கைரேகை வசதியை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த அப்டேட்டில் கைரேகை மூலம் உரியவர் தான் பயன்படுத்துகிறாரா? என்பதை உறுதி செய்த பிறகு குறுஞ்செய்திகளைப் பார்க்கும் வசதியை வெளியிடவுள்ளது.

புதிய அப்டேட் மூலம் பயனர்களின் தனிபட்ட அல்லது முக்கியமான குறுஞ்செய்திகளை பாதுகாக்க முடியும் என நம்பப்படுகிறது. மேலும் WABetaInfo என்னும் இணையதளம் அளித்த தகவல் படி இந்த புதிய பாதுகாப்பு முறை வாட்ஸ் ஆப் பிட்டாவில் இன்னும் இந்த அப்டேட் சோதனை நிலையில் இருப்பதாக தெரிகிறது.

ஐ போனில் பேஸ் சென்சார் மூலம் அன்லாக் செய்யும் முறையையும் மேலும் கைவிரல் ரேகை சென்சார் மூலம் அன்லாக் செய்யும் முறையை வாட்ஸ் ஆப் நிறுவனம் இதற்கு முன் கொண்டுவந்தது. அந்த அப்டேட் இன்னும் சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது அண்ட்ராய்டு போனில் கைவிரல் ரேகை பதியும் முறை சோதனை செய்யப்படுகிறது.

வாட்ஸ்அப் செயலியில் கைரேகை பாதுகாப்பு வசதியை இயக்க செட்டிங்ஸ் – அக்கவுண்ட் – பிரைவசி உள்ளிட்ட ஆப்ஷன்களை தேர்வு செய்து இந்த அம்சத்தை இயக்கினால் மட்டுமே சாட் விவரங்களை பாதுகாக்க முடியும்.

ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ மற்றும் அதற்கும் அதிக இயங்குதளங்களை பயன்படுத்தும் அனைவருக்கும் கைரேகை பாதுகாப்பு வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. எனினும், இதை செயல்படுத்த ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் இருக்க வேண்டியதும் அவசியமாகும்.

மேலும் இந்த அப்டேட் அண்ட்ராய்டு போனுக்கு உடனடியாகவும் பின்னர் ஐ போனுக்கும் பொருந்துமாறு செயல் படுத்தப்படும்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்