பயணிகள் விமான போக்குவரத்து : சீனா தொடங்கி விட்டது

0
131

கொரோனா வைரஸ் தொற்றுக் முதலில் சீனாவின் வுஹான் நகரில் கண்டறியப்பட்து. தற்போது அது உலகம் முழுவதும் பரவி பலரது உயிரைக் குடித்து வரும் நிலையில் சீனா தன் நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டது.

இந்நிலையில், கொரோனா தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச விமானசேவை பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. ஆனால் சீனாவில் வெளிநாடுகளுடனான சிவில் விமான போக்குவரத்து தொடங்கி நடந்து வருகிறது

அங்கு இப்போது 50 நாடுகளுடன் பயணிகள் விமான சேவை நடந்து வருகிறது. இதுபற்றி சீன சிவில் விமான போக்குவரத்து துணைஇயக்குனர் உ ஷிஜி கூறுகையில், “ஆகஸ்டு 12 ஆம் தேதி நிலவரப்படி, 50 நாடுகளுடனும், பிராந்தியங்களுடனும் சீன சிவில் விமான போக்குவரத்து நடந்துவருகிறது. 93 விமான நிறுவனங்கள் (19 சீன நிறுவனங்கள், 74 அன்னிய நிறுவனங்கள்) 210 திரும்பும் விமான சேவையையும், 187 வழக்கமான தடங்களில் வாரம்தோறும் மேற்கொள்கின்றன” என தெரிவித்தார்.

(இந்தக் கட்டுரை பல்வேறு தரவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here