புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் 23 பேரின் வங்கிக் கடனை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தள்ளுபடி செய்துள்ளது.

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த 40 சிஆர்பிஎப் வீரர்களில் 23 பேர் வங்கியில் கடன் பெற்றிருந்தனர். அவை அனைத்தும் உடனடியாக தள்ளுபடி செய்யப்படுகிறது என்று எஸ்பிஐ அறிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த வியாழக்கிழமை, தற்கொலைப்படைத் தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

ரஜினீஷ் குமார் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது : புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட 40 சிஆர்பிஎப் வீரர்களில் 23 பேர் எங்கள் வங்கியின் வாடிக்கையாளர்கள். இந்நிலையில், நிலுவையில் இருக்கும் அவர்களின் கடன் தொகை முழுவதையும் உடனடியாக ரத்து செய்வதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு காப்பீடுத் தொகையாக வீரர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க இருக்கிறோம்.

நாட்டின் பாதுகாப்புக்காகச் சென்று உயிர்நீத்த வீரர்கள் நிலை வேதனையளிக்கிறது. அவர்களின் குடும்பத்தினரை காக்க வேண்டியது அனைவரின் கடமை. வீரர்களை இழந்து தவித்து வரும் குடும்பத்தினருக்கு எங்கள் வங்கியின் மூலம் சிறிய உதவியாக இதை செய்கிறோம். மேலும், எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் சிஆர்பிஎப் வீரர்களுக்கு உதவ விருப்பம் இருந்தால், bharatkeveer.gov.in’ என்ற இணையதளத்தில் நிதியை நேரடியாக அளிக்கலாம் ” என்று அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு தரப்பினரும் உதவிகள் செய்து வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here