கண் ஆரோக்கியமாக இருக்க பப்பாளி பழம் சிறந்தது என நம் அனைவரும் தெரியும். அதோடு உடல் ஆரோக்கியத்திற்கான பல நற்குணங்களையும் பப்பாளி கொண்டுள்ளது. எனினும், அளவுக்கு அதிகமான அளவு பப்பாளி பழங்களை சாப்பிடுவதனால், பக்க விளைவுகள் ஏற்படுகின்றன என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதனால் ஏற்பட கூடிய பக்க விளைவுகளை தடுக்க, சரியான அளவில் பப்பாளி பழங்களை உட்கொள்ள வேண்டியது அவசியம். 

பப்பாளி பழத்தினால் ஏற்படும் பக்க விளைவுகள்
கர்ப்பிணி பெண்களுக்கு ஆபத்தானது

பொதுவாக, கர்ப்பிணி பெண்கள் பப்பாளி பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை அளிப்பதுண்டு, பப்பாளியில் உள்ள லாடெக்ஸ், கருவை பாதிக்கும் என சொல்லப்படுகிறது. 
news 9A.003

அஜீரணம்

பப்பாளியில் அதிக நீர்ச்சத்து இருந்தாலும், அளவுக்கு அதிகமாக உட்கொள்வதினால், வயிறு சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. பப்பாளியில் உள்ள லாடெக்ஸ் வயிற்று வலி, எரிச்சல் போன்ற பாதிப்புகளை உண்டாக்குகிறது.

மருந்துகள்

மருந்துகள் எடுத்துக் கொள்ளும் சமயத்தில் பப்பாளி சாப்பிடுவது, பக்க விளைவுகள் ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
news 9A.002

ரத்த சர்க்கரை அளவு

ரத்த சர்க்கரை அளவை குறைப்பதனால், நீரிழிவு நோய் உள்ளவர்கள் பப்பாளி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அல்லது மருத்துவரின் ஆலோசனைப் பெற்று சாப்பிடலாம். 

அழற்சி

பப்பாளி சாப்பிடுவதனால் சிலருக்கு அழற்சி ஏற்பட வாய்ப்புண்டு. வீக்கம், தலைவலி, அரிப்பு, போன்ற பிரச்சனைகளும் உண்டாகும்
news 9A.001


சுவாச பிரச்சனைகள்

அளவுக்கு அதிகமாக பப்பாளி சாப்பிடுவதனால், ஆஸ்துமா, மூச்சு திணறல், போன்ற சுவாச பிரச்சனைகள் ஏற்படும்

பக்க விளைவுகள் ஏற்படாமல் இருக்க, அளவுக்கு அதிகமாக பப்பாளி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.  மருத்துவரின் பரிந்துரையோடு, உடல் தன்மைக்கு ஏற்ப, சரியான அளவில் பப்பாளி பழங்களை சாப்பிட்டால் இந்த பிரச்னைகள் எதுவும் உங்களை நெருங்காது. 

courtesy: ndtv

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here