பத்து தினங்களில் 148 கோடிகள் – வசூல் சாதனை படைக்கும் ரங்கஸ்தலம்

0
304
Samantha & Ram Charan

ராம் சரண், சமந்தா நடிப்பில் சுகுமார் இயக்கியுள்ள ரங்கஸ்தலம் படம் வசூல் சாதனை படைத்து வருகிறது.

கடந்த 30 ஆம் தேதி ரங்கஸ்தலம் வெளியானது. சென்னையில் முதல் மூன்று தினங்களில் 1 கோடியை கடந்து ரங்கஸ்தலம் ஆச்சரியப்படுத்தியது. யுஎஸ்ஸில் இப்படம் முதல் மூன்று தினங்களில் 14 கோடிகளைக் கடந்தது. ஆந்திரா, தெலுங்கானாவில் நல்ல வசூல். கர்நாடகாவிலும்.

ஆனால், வார நாள்களில் படத்தின் வசூல் குறைந்தது. முதல் மூன்று தினங்களில் 14 கோடியை தாண்டிய படம் முதல் பத்து தினங்களில் யுஎஸ்ஸில் 16.64 கோடிகளை மட்டுமே வசூலித்துள்ளது. அதேபோல் சென்னையில் முதல் பத்து தினங்களில் 1.91 கோடி.

ஆந்திரா, தெலுங்கானாவில் முதல் பத்து தினங்களில் 100 கோடியை கடந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் 13 கோடிகளை படம் தாண்டியுள்ளது. ஒட்டு மொத்தமாக உலக அளவில் முதல் பத்து தினங்களில் 148 கோடிகளை படம் வசூலித்துள்ளதாக ஆந்திராவிலிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

ரங்கஸ்தலத்தின் வசூல் 150 கோடிகளை கடந்தால் ராம் சரண் இதுவரை நடித்தப் படங்களில் அதிகம் வசூலித்த படம் என்ற பெருமை ரங்கஸ்தலத்துக்கு கிடைக்கும்.

இதையும் படியுங்கள்: போராட்டக்காரர்களை போலீசார் தாக்கியது ரஜினியின் கண்களுக்குத் தெரியவில்லையா?’

இதையும் படியுங்கள்: அதிர்ச்சியில் கர்நாடக காங்கிரஸ்; ஏன்?

இதையும் படியுங்கள்: #BanSterlite: “மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை மூடிட்டுப் போக வேண்டியதுதானே”

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்