பத்திரிகையாளர் தீ வைத்து எரிப்பு; விவசாய அதிகாரி மீது குற்றச்சாட்டு

Journalist with 90% burns dies, brother says was set ablaze by agriculture officer

0
205

மத்திய பிரதேசத்தின் சாகரில் , இந்தி நாளிதழில் பணிபுரியும் பத்திரிகையாளர் சக்ரேஷ் ஜெயினை தீ வைத்து கொளுத்தியதால் இறந்திருக்கிறார். கூடுதல் விவசாய விரிவாக்க அதிகாரியும், மற்றொருவரும் சேர்ந்து தனது சகோதரர் மீது கொளுத்தியதாக இறந்தவரின் சகோதரர்  கூறியுள்ளார். 

கூடுதல் விவசாய விரிவாக்க அதிகாரியான அமன் சௌத்ரிக்கும் , பத்திரிகையாளர் சக்ரேஷ் ஜெயினுக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மோதல் இருந்தது . எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சௌத்திரி மீது பத்திரிகையாளர் ஜெயின் வழக்கு தொடுத்திருந்தார்.  வழக்கும் முடியும் தருவாயில் உள்ள நிலையில் இந்த கொலை முயற்சி சம்பவம் நடந்துள்ளது.

 குற்றச்சாட்டுகளை மறுத்த சௌத்ரி பத்திரிகையாளார் சக்ரேஷ் ஜெயின் வீட்டிற்கு வந்து தீ வைத்து கொண்டதாக கூறியுள்ளார். 

மூத்த காவல்துறை அதிகாரி அமித் சங்கி NDTVயிடம் தெரிவித்த போது, சௌத்ரி மாஜிஸ்திரேட் முன் அளித்த அறிக்கையில் வழக்கு குறித்து பேச சக்ரேஷ் ஜெயின் சௌத்ரியின் வீட்டுக்கு காலை 8 மணியளவில் அடைந்ததாக கூறினார். ஜெயின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததாக தெரிகிறது என்று கூறினார்.  

கிட்டத்தட்ட 5 மணிநேரம் கழித்து சகோதரர் ராஜ்குமார் ஜெயின் பார்த்து சகோதரரை மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவர் இறந்து விட்டதாக அறிவித்தனர்.  இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது . மேலும் பிரிவு எண் 174 கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. 

 சகோதரர் ராஜ்குமார் தன் சகோதரனை மருத்துவமனைக்கு கொண்டு வரும் போது அவருக்கு உயிர் இருந்தது. இறப்பதற்கு முன்  அமன் சௌத்ரியும், மற்றொருவரும்  சேர்ந்து கொன்றுள்ளனர் என்று தன்னிடம் கூறியதாக சக்ரேஷ் சௌத்ரியின் சகோதரர் கூறியுள்ளார். 

 மேலும் தன் சகோதரரை மருத்துவமனை கொண்டு சென்ற பொழுது உயிருடன் இருந்தார் என்றும் அங்கு இறந்த போது அவரின் மரணம் பதிவு செய்யப்படவில்லை என்றும்  அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here