பத்திரிகையாளர்கள் மனம் புண்பட்டிருந்தால் வருந்துகிறேன்: ரஜினிகாந்த்

0
340

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மே22ஆம் தேதி நடந்த போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை ரஜினிகாந்த் புதன்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: போராட்டத்தின்
கடைசி நாளிலும் சமூக விரோதிகள் புகுந்துதான் கெடுத்திருக்கின்றனர். சமூக விரோதிகள்தான் போலீஸாரைத் தாக்கினார்கள்,
ஆட்சியர் அலுவலகத்தை அடித்து நொறுக்கினார்கள் , குடியிருப்புகளுக்கும், வாகனங்களுக்கும் தீ வைத்தார்கள் என்று கூறினார்.

இது எனக்கு எப்படித் தெரியும் எனக் கேட்கவேண்டாம். எனக்கு நன்கு தெரியும் அவ்வளவுதான். சமூக விரோதிகள் போலீஸாரை அடித்த பிறகுதான் பிரச்னை பெரிதாகியது . காவல் துறை மீது தாக்குதல் நடத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எதற்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம் என்று மக்கள் இறங்கினால், தமிழகம் சுடுகாடு ஆகிவிடும் என்றார்.

இந்நிலையில், விமானநிலையத்தில் நேற்று அளித்த பேட்டியின் போது நான் மிரட்டல் தொனியில், ஒருமையில் பேசியதாக சென்னை பத்திரிகையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. யாரையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இருந்ததில்லை, அப்படி எந்த பத்திரிகை அன்பர்களின் மனதாவது புண்பட்டிருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here