பத்திரிகையாளரின் வாயில் சிறுநீர் கழித்து அடித்து உதைத்த ரயில்வே போலீஸார் (வீடியோ)

0
323

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அவமதித்ததாக கூறி 3 பத்திரிகையாளர்கள் உட்பட 5 பேரை கைது செய்தது காவல்துறை. அந்தச் செய்தி ஓய்வதற்குள் உத்தரபிரதேசத்தில் பத்திரிகையாளர் ஒருவரை வாயில் சிறுநீர் கழித்து அடித்து, உதைத்துள்ளனர் ரயில்வே போலீஸார் .  

நியுஸ்24 தொலைக்காட்சியின் பத்திரிகையாளர் அமித் சர்மா, ஷாம்லி மாவட்டம் ,திம்பவுராவில்   ரயில் தண்டவாளத்தில் தடம்புரண்டது குறித்த செய்தி சேகரிக்க சென்றிருந்தார். அப்போது அவரை ரயில்வே போலீஸார் ஒரு அறைக்குள் அடைத்து வைத்து வாயில் சிறுநீர் கழித்து அடித்துள்ளனர். 

அவர்கள் என்னை அடிக்கும்போது போலீஸ் உடையில் இல்லை. ஒருவர் என் கேமராவை தள்ளிய போது அது கீழே விழுந்தது. அதை எடுக்க முயன்றபோது என்னை அடித்து கடுமையான சொற்களால் என்னை பேசினார்கள். பிறகு என்னை ஒரு அறைக்குள் வைத்து பூட்டி என்னை அடித்து என் வாயில் சிறுநீர் கழித்தனர் என்று இந்தச் சம்பவம் குறித்து அமித் ஷர்மா கூறியுள்ளார். 

அந்த வீடியோவில் பத்திரிகையாளரை அடிப்பது ஸ்டேசன் ஹவுஸ் அதிகாரி ராகேஷ் குமார், மற்றும் போலீஸ் சஞ்சய் பவார் – அவர்கள் இருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

பத்திரிகையாளரை தாக்குவதற்கான காரணம் இதுதான்

அமித் ஷர்மா ரயில்வே போலீஸ் துறையில் நடைபெறும் ஊழல்கள் குறித்து இதற்கு முன்பு செய்தி வெளியிட்டிருக்கிறார். 

ரயில்வே போலீஸார் உரிமம் வாங்காத விற்பனையாளர்களிடம் லஞ்சம் வாங்கிவிட்டு  டெல்லி – ஷரண்புர் வழித்தடங்களில் செல்லும் ரயில்களில் , சட்டவிரோதமாக இருந்தும்கூட விற்பனையாளர்கள் தங்கள்  பொருட்களை விற்பனை செய்ய அனுமதித்துள்ளனர், மேலும் இவ்வாறு அவர்களை  அனுமதிப்பதன்மூலம் மாதம் ஒன்றரை லட்சம் லஞ்சம் வாங்குகிறார்கள்  என்ற செய்தியை மே 11 ஆம் தேதி  அமித் ஷர்மா வெளியிட்டுள்ளார்.  

மேலும் இந்தச் செய்தியை நியுஸ் 24 ஜூன் 12 ஆம் தேதி மீண்டும் ஒளிபரப்புகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here