கர்நாடகாவில் எடியூரப்பாவை தொடர்ந்து முதலமைச்சராக பதவியேற்ற பசவராஜ் பொம்மை ஐந்தே மாதங்களில் பதவி விலகுவது குறித்து சூசகமாக பேசி இருப்பது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் தமது சொந்த தொகுதியான சிக்காங் தொகுதிக்குட்பட்ட ஹாவேரியில் கிட்டூர் ராணி சென்னம்மா சிலை திறப்பு விழாவில் பேசிய அவர், அங்குள்ள மக்களுடன் தமக்குள்ள தொடர்பை உருக்கத்துடன் பகிர்ந்துக்கொண்டார்.உங்கள் ஆசியால் நான் இன்று முதலமைச்சராக இருக்கிறேன். உள்துறை அமைச்சராக, நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் முதலமைச்சர் பதவிகளை வகித்துவிட்டேன். வாழ்க்கையில் எதுவும் நிரந்தரம் இல்லை. பதவியோ, பட்டங்களோ எதுவும் எப்போதும் நிரந்தரம் அல்ல என்பதை ஒவ்வொரு கணமும் உணர்ந்தே இருப்பதாக அவர் கூறினார்.

உங்களை பொறுத்தவரை நான் எப்போதும் பசவராஜ் பொம்மைதான். வாழ்க்கையே நிரந்தரம் அல்ல என்று குறிப்பிட்டார். கடந்த ஜூலையில் எடியூரப்பா ராஜினாமாவை தொடர்ந்து முதலமைச்சராக பதவியேற்ற பசவராஜ் பொம்மை, கால் முட்டி பிரச்னை காரணமாக பதவி விலக போவதாக பாரதிய ஜனதா வட்டாரங்களில் இருந்து தொடர்ந்து செய்திகள் கசிந்தவண்ணம் இருந்தன.

அவரது தற்போதைய பேச்சு அந்த ஊகங்களுக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைந்திருக்கிறது. பசவராஜ் பொம்மை விரைவில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கால் முட்டி பிரச்சனைக்காக வெளிநாடு சென்று சிகிச்சை பெறுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here