மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மேலும் ஒரு வழக்கைக் காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.

கடந்த மே மாதம் 21ஆம் தேதியன்று, சென்னை கடற்கரையில் தமிழீழ இனப்படுகொலையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த ஒன்றுகூடிய மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சி ஒருங்கிணைப்பாளர் டைசன், இளமாறன், அருண் உள்ளிட்ட 17 பேர் மீது, தமிழ்நாடு காவல்துறையினர் வழக்குப் பதிந்து புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், திருமுருகன், டைசன், இளமாறன், அருண் ஆகிய நால்வர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.

இதனைதொடர்ந்து ஐஓசி.க்கு எதிராக போராட்டம் நடத்தியதாக திருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தநிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக போராடியதாகத் தொடரப்பட்ட வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படியுங்கள் : இடஒதுக்கீட்டை எதிர்த்த நடிகை கஸ்தூரி மாட்டிறைச்சி திருவிழாவுக்கு எதிரான கருத்து

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்