பணம் தராத யூடியூபுக்கு எதிராக துப்பாக்கி தூக்கிய பெண் இவர்தான்

"Nasim Najafi Agdham always complained that YouTube ruined her life"

0
997
நஸிம் நஜஃபி அக்தம்

இவரது பெயர் நஸிம் நஜஃபி அக்தம்; அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தின் தெற்கு பகுதியில் சான் டீகோவில் வசித்திருக்கிறார். 38 வயதான இவர், வெகானிஸம் என்கிற சுத்த சைவ வாழ்வியலைக் கடைபிடித்தவர். இதைப் பற்றிய யூடியூப் சேனல் ஒன்றைத் தனது பெயரில் நடத்தியிருக்கிறார். ”யூடியூப் தனக்குப் பணம் தருவதை நிறுத்தி விட்டதால் கோபமாக இருந்தார் நஸிம்” என்று சான் புருனோ காவல் துறைத் தலைவர் எட் பார்பெரினி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். நஸிமின் சகோதரர் சஹரனும் இதே கருத்தை ஊடகங்களிடம் சொல்லியுள்ளார். “யூடியூப் தனது வாழ்வைச் சீரழித்து விட்டது என்று எப்போதும் அவர் குறை சொல்லுவார்” என்று சஹரன் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமையன்று சான் பிரான்சிஸ்கோவின் புறநகர்ப் பகுதியிலுள்ள யூடியூப் தலைமையகத்துக்குள் நுழைந்து நஸிம் சுட்டதில் மூன்று பேர் படுகாயமடைந்தார்கள்; காவலர்கள் வரும் முன்னதாக தன்னையே சுட்டுக் கொண்டு உயிரிழந்துள்ளார் நஸிம். வீட்டை விட்டு காரில் புறப்பட்ட நஸிம் இரண்டு நாட்களாக போன் அழைப்புகளை எடுக்கவில்லை. எனவே அவரது தந்தை அக்தம் திங்கள் கிழமையன்று காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தார். “யூடியூப் மீது கோபமாக இருந்ததால் அந்த அலுவலகத்துக்கு அவள் போகக்கூடும்” என்று தனது புகாரில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

செவ்வாய்க் கிழமையன்று அதிகாலை 2 மணிக்கு கலிஃபோர்னியாவின் பே ஏரியாவில் தனது காரில் தூங்கிக் கொண்டிருந்தார் நஸிம்; காவலர்கள் அவரை அணுகிக் கேட்டபோது, “வேலை தேடி வருவதாக” சொல்லியுள்ளார். வேலை தேடும் குடும்பங்களும் தனிநபர்களும் காரிலேயே வாழ்வது பே ஏரியாவில் சகஜம் என்பதால் காவலர்கள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஒக்கி சொந்தங்களுடன் கரம் பிடித்து நடப்போம்

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்