பிரதமர் நரேந்திர மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை கறுப்புப் பணத்தை ஒழிக்கும் என்ற கருத்திற்கு ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் எதிர்ப்பு தெரிவித்தாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் வெங்கடேஷ் நாயக் என்பவர், தகவல் கேட்டு விண்ணப்பித்து இருக்கிறார். இதற்கு ரிசர்வ் வங்கி அளித்த பதிலை இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 8 ஆம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும், கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அப்போது தெரிவித்தார்.

இது பாராட்டத்தக்க நடவடிக்கை, ஆனால் பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஆண்டின் ஜிடிபி வளர்ச்சியில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று கூறியிருப்பதாக இந்த ஆர்டிஐ தகவலைப் பெற்ற ஆர்டிஐ சமூகச் செயல்பாட்டாளர் வெங்கடேஷ் நாயக் என்பவர் காமன்வெல்த் மனித உரிமைகள் முயற்சி அமைப்பின் இணையதள போஸ்ட்டில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக பிரதமர் மோடி ரிசர்வ் வங்கி நிர்வாக இயக்குநர்களிடம் கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் ரிசர்வ் வங்கி நிர்வாக இயக்குநர்கள் சிலர் இந்த கருத்தை ஏற்க மறுத்துள்ளனர்.

கருப்புப் பணத்தின் பெரும்பகுதி ரொக்கமாக இருப்பதல்ல, அது பெரும்பாலும் ரியல் எஸ்டேட் சொத்துக்களாக, தங்கமாக இருப்பதே ,ஆகவே கருப்புப் பணத்தின் மீது இந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது” என்று ஆர்பிஐ போர்டு தனது 561வது கூட்டத்தில் தெரிவித்துள்ளது .

கறுப்புப் பணம் என்பது புழக்கத்துக்கு விடப்பட்டுள்ள மொத்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், ரூ. 400 கோடி அளவில்தான் உள்ளது என்றும், இது மிகச் சிறிய எண்ணிக்கைதான் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை கருப்பு பண ஒழிப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது” என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இருப்பினும் உயர் மதிப்பு ரூபாய் நோட்டு தடையால் மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறுவதற்கு இது ஒரு வாய்ப்பை ஏற்படுத்தும் என்ற அரசு தரப்பின் வாதத்தைப் பொது நலன் கருதி ஏற்று, பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பதாக இந்த ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் கடைசியில் கூறியதாக ஆர்பிஐயின் மினிட்ஸ் தெரிவிக்கிறது .

மேலும் இந்த ஆர்டிஐ தகவலில் கிடைத்த புதிய விஷயம் என்னவெனில் 6 மாதங்கள் விவாதம் நடந்துள்ளது என்பதே. அதாவது ஜூன் 2016 முதல் மத்திய அரசும் ஆர்பிஐ-யும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து விவாதித்து வந்துள்ளன.

முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் பிறகு அளித்த நேர்காணல்களில் பிப். 2016-இல் தன்னிடம் அரசு பணமதிப்பு நீக்கம் பற்றி கருத்துகளைக் கேட்டதாகத் தெரிவித்திருந்தார்.

Minutes of RBI’s board meeting on demonetisation by The Wire on Scribd

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here