பணமதிப்பிழப்பை விமர்சித்து பாடல் – உண்மையை சொல்ல பயந்தது இல்லை என சிம்பு பேச்சு

0
437
Simbu

2017 நவம்பர் 8 மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்தியாவின் மீது தொடுக்கப்பட்ட அதிபயங்கர தாக்குதலாக அமைந்தது. அதன் பாதிப்பிலிருந்து நாடு இன்னும் மீளாதநிலையில், நவம்பர் 8 ஆம் தேதியை மக்கள் கறுப்பு தினமாக அனுசரித்தனர். பணமதிப்பிழப்பை விமர்சித்து தட்டுறேnம் தூக்குறேnம் என்ற பெயரில் டீமானிடைசேஷன் ஆந்தம் ஒன்று வெளியிடப்பட்டது.

இந்தப் பாடலை கபிலன் வைரமுத்து எழுத சிம்பு பாடியிருந்தார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையை விமர்சித்ததால் பாஜகவினர் பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சிம்புவையும் கண்டித்து வசைபாடி வருகின்றனர். இந்நிலையில் இந்தப் பாடல் பாடியது குறித்து பேசியுள்ளார் சிம்பு.

குறிப்பிட்ட பாடலை தான் எழுதவோ இசையமைக்கவில்லை, பாடல் வரிகள் பிடித்திருந்ததால், எனக்கு உண்மை என்று தோன்றியதால் பாடினேன் என அவர் கூறியுள்ளார். யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்தப் பாடலை உருவாக்கவில்லை, எனக்கு உண்மை என்று தோன்றுவதை சொல்ல என்றும் பயந்ததும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்: பசுக்களை ஏற்றிச் சென்ற முஸ்லிம் இளைஞர் படுகொலை: ’நீதி கிடைத்தாக வேண்டும்’

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்