ஜிஎஸ்டி என்பது கொள்ளை . அந்த ஜிஎஸ்டியை அறிவித்து ஒரு வருடம் முடிவதற்குள் 357 திருத்தங்களை செய்தது மோடி அரசு என்று பாஜக எம்பி யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் நடந்த விவசாயிகள் கூட்டத்தில் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, பாஜக எம்.பி. சத்ருஹன் சின்ஹா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தை ஹர்திக் படேலின் பட்டிதார் சமூகம் ஏற்பாடு செய்திருந்தது.

பாஜக எம்.பி. சத்ருஹன் சின்ஹா பேசுகையில், ”என்னை நாளைக்கே பாஜக கட்சியில் இருந்து நீக்கினால்கூட நான் புகார் கூறமாட்டேன். என் தனிப்பட்ட சுயலாபத்துக்காக அரசியலுக்குள் வரவில்லை.என்னுடைய கட்சியைக் காட்டிலும் என் மக்களை நேசிக்கிறேன் எனத் தெரிவித்தார். மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை சர்வாதிகார நடவடிக்கை . அதன் பிறகு ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்தினார்கள் . அந்த ஜிஎஸ்டியில் ஒரு வருடம் முடிவதற்குள் 357 திருத்தங்களைச் செய்தார்கள்.

யஷ்வந்த் சின்ஹா கூறியது போல் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைத் திற்ப்புக்கு வந்தக் கூட்டத்தைவிட ஹர்திக் பட்டேல் அவர்களின் நிகழ்ச்சிக்கு அதிக கூட்டம் வந்திருக்கிறது

நான் உண்மையைக் கூறுவது கிளர்ச்சி என்றால், நான் ஒரு கிளர்ச்சியாளன் என்ற குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்கிறேன் . என்னைக்க் கேட்டார்கள் நீங்கள் பாஜகவில் இருந்துக் கொண்டே ஏன் பாஜகவை விமர்சனம் செய்கிறீர்கள் என்று அதற்கு என்னுடைய பதில் நான் பாஜகவில்தான் இருக்கிறேன் ஆனால் முதலில் நான் ஒரு இந்தியன் . நாடுதான் எனக்கு முதன்மையானது .

ரஃபேல் பற்றிய விவரங்களை ஏன் வெளிப்படையாக மோடி அரசு அறிவிக்கவில்லை. ஹெச் ஏ எல் -லை அந்த ஒப்பந்தத்தின்போது புதைத்துவிட்டு , புதிதாக துவங்கி 10 நாட்களே ஆகியிருந்த ரிலையன்ஸுக்கு ஒப்பந்தத்தை கொடுத்தார்கள்.

நான் ஜேபி நாராயண் அவர்களை பார்த்துதான் பாஜகவில் இணைந்தேன் அத்வானி அவர்களிடம் அரசியல் கற்றேன் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here