பழைய ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணிகளை ஆர்பிஐ செய்து முடித்திருக்கிறது.

அந்த வகையில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.500 மற்றும் ரூ.1000 ரூபாய் நோட்டுகள் ரூ.10,720 கோடி அளவுக்கு வங்கிகளுக்கு திரும்ப வந்து சேரவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

செல்லாத ரூ.1000, ரூ.500 நோட்டுகளுக்குப் பதிலாக ரிசர்வ் வங்கி புதிய ரூ.2000, ரூ.500 நோட்டுகளை வெளியிட்டது. பணமதிப்பு நீக்க நடவடிக்கை கொண்டுவரப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடையும் சூழலில் எத்தனை லட்சம் கோடி செல்லாத ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு வந்துள்ளன என்பது குறித்த தெளிவான புள்ளிவிவரங்களை ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை.

2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி மோடி அரசால் பணமதிப்பிழக்கம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சுமார் இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகவிருக்கும் நிலையில், பணமதிப்பிழக்கம் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் எண்ணும் பணி நிறைவு பெற்றுள்ளது.

ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதன் இறுதி அறிக்கையையில் பணமதிப்பிழக்கம் நடவடிக்கையின் போது இந்தியாவில் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.15.4 லட்சம் கோடி.

இதில் ரூ.15.3 லட்சம் கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் திரும்ப வங்கிக்கு வந்துவிட்டது. அதாவது புழக்கத்தில் இருந்த 99 சதவீத ரூபாய் நோட்டுகள் வங்கிக்குத் திரும்பிவிட்ட நிலையில், ரூ.10,720 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்ப வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் கருப்புப் பணமாக பதுக்கி வைத்திருக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் சட்ட நடவடிக்கைகளுக்கு பயந்து வங்கிகளுக்கு வராமல் போயிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here