2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வந்தபின் அதிகபட்சமாக குஜராத் மாநிலத்தில்தான் கள்ள நோட்டுகள் பிடிபட்டுள்ளன என்று மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர்

மத்திய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரங்கள்படி, கடந்த 2016, நவம்பர் 8-ஆம் தேதி கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிகைக்குப் பின் ரூ.13.87 கோடி கள்ள நோட்டுகள் பிடிபட்டுள்ளன.

அதாவது நேபாள, பாகிஸ்தான், மற்றும் வங்கதேச எல்லைப்பகுதியில் கடந்த 2016, நவம்பர் 9-ஆம் தேதியில் இருந்து இந்த ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி வரை ரூ.13.87 கோடி கள்ள நோட்டுகள் பிடிபட்டுள்ளன.

இதில் நாட்டிலேயே அதிகபட்சமாக குஜராத் மாநிலத்தில்தான் ரூ.5.94 கோடி கள்ள நோட்டுகள் பிடிபட்டன.அ உத்தரப்பிரதேசத்தில் ரூ.2 கோடியும், மேற்கு வங்கத்தில் ரூ.1கோடியும், மிஸோரத்தில் ரூ. 1கோடியும் கள்ள நோட்டுகள் பிடிபட்டன.

நாட்டில் கள்ள நோட்டுகளை யார் புழக்கத்தில் விடுகிறார்கள் என்பதை மத்திய அரசின் புலனாய்வுப் பிரிவும், பாதுகாப்பு முகமைகளும் தீவிரமாக கண்காணித்து வருகின்றன.

கள்ளநோட்டுகளை தடுக்கும் பிரிவு மத்திய உள்துறை அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டு, அது தகவல்களை புலனாய்வு பிரிவு, சிபிஐ உள்ளிட்ட அமைப்புகளுக்கு வழங்கி வருகிறது.

மேலும், தேசிய புலனாய்வு அமைப்பு சார்பில் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதிதிரட்டுதல், கள்ளநோட்டுகளைத் தடுத்தல் ஆகியவற்றுக்காகத் தனி விசாரணை மையமும் உருவாக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு அவ்வப்போது தகவல்கள் பரிமாறப்பட்டு வருகிறது என்று ஹன்ஸ்ராஜ் அஹிர் தெரிவித்துள்ளார்.

Courtesy : The week

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்